×

ஆர்யா மீது வெளிநாட்டு பெண் கொடுத்த புகாரில் திருப்பம்...2 பேர் கைது!...

 
arya

இலங்கையை சேர்ந்த விட்ஜா என்கிற பெண் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை கமிஷன் அலுவகத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் ஆர்யா ஆஜராகி விளக்கமும் அளித்தார்.

arya

அந்த பெண் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். ஆன்லைன் மூலமாக இந்த புகாரை அளித்திருந்தார். அந்த புகாரில், நடிகர் ஆர்யா, சாயீஷாவை திருமணம் செய்துகொள்ளும் முன்பாக, தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்ததாகவும், தன்னிடம் இருந்து ரூ. 71 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

arya

இந்நிலையில், சென்னையை சேர்ந்த 2 நபர்கள் ஆர்யா பெயரில் அப்பெண்ணிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.  சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் முகமது அர்மான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News