×

நான் என்ன தப்பு செஞ்சேன்... கலங்கிய வைகைப் புயல்

திரைப்படங்களில் நடிக்க முடியாதது குறித்து வைகைப்புயல் வடிவேலு கலக்கத்தோடு நண்பர்களிடம் பேசியிருக்கிறார். 
 

கோலிவுட்டில் ராஜ்கிரண் மூலம் அறிமுகமான வடிவேலு, காமெடியில் புதிய சகாப்தத்தையே படைத்தார். சினிமாவில் அவரது கரியர் உச்சத்தில் இருந்தபோது, ஒரு சில முடிவுகளால் வாய்ப்புகள் அவருக்குக் குறையத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் வடிவேலு, அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதுண்டு. அந்த நிகழ்ச்சிகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். 


அப்படியாக சமீபத்தில் சினிமா பிரபலங்கள் பலரும், சில போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸ் குழு ஒன்றின் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேலு, நடிக்க முடியாதது பற்றி மிகவும் வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார். ``நான் என்ன தப்பு செஞ்சேன்? நடிக்க ஆசை இருக்கு, உடலில் தெம்பும் இருக்கு. ஆனா ஒருத்தரும் கூப்பிடாம வீட்டுலயே அடைஞ்சு கிடக்கிறது எவ்வளவு பெரிய ரணமா இருக்கு தெரியுமா?’’ மனம் கலங்கி பேசியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News