×

கோவிலில் வைத்து நயன்தாராவை திருமணம் செய்யப்போகும் விக்னேஷ் சிவன்...?

நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

 

அவ்வளவு ஏன்..  இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடியான இவர்கள்  காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். அந்த  அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் செம கடுப்பானாலும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என செல்லமாக அட்வைஸ் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நயன் விக்கியை திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டாராம். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்  நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த மாத இறுதிக்குள்  இருவரும் மிகவும் சிம்பிளா கோவிலில் வைத்து திருமணம் செய்ய போகிறார்களாம். இது உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும் நயன் ரசிகர்களை உற்சாகப்டுத்தியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News