rajini vijay
Vijay rajini: ரஜினியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர் விஜய். சிறு வயது முதல் பல வருடங்கள் இவர் ரஜினி ரசிகனாகத்தான் இருந்தார். அவர் துவக்கத்தில் நடிக்கும் படங்களில் கூட ரஜினி பட போஸ்டரை காட்டி நடனம் ஆடி ‘தலைவரு’ என பாடல் பாடுவார். அதன்பின் காதல் படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒருகட்டத்தில் ரஜினி ரூட்டை பிடித்த விஜய் ஆக்ஷன் காதல் கலந்த ஆக்ஷன் கதைகளில் நடிக்க துவங்கினார். இதையடுத்து என் மகன்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி வந்தார். ஆனால், ரஜினியின் இடத்தை விஜயால் பிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: 1000 கோடி சொத்துக்கு அதிபதி! சிம்புவின் வளர்ச்சிக்கு குறுக்கே நிக்கும் அந்த கருப்பு ஆடு யார் தெரியுமா?
ரஜினி இடத்தை யாராலும் பிடிக்கவும் முடியாது. ஏனெனில், அவருக்கு ஜப்பானில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியின் வீச்சு அதிகம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினி நடந்தாலும், திரும்பினாலும் அது செய்திதான். 70 வயதிலும் கூட அவரால் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடிகிறது.
ஆனால், வாரிசு படம் ரிலீஸின் போது விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் மேடைகளில் பேச விஜயும் அமைதியாக அதை ரசித்தார். எனவே, ஜெயிலர் பட விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையை சொல்லி கொட்டு வைத்தார். காக்கா எவ்வளவு உயர பருந்தாலும் கழுகாக முடியாது என ரஜினி பேசினார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் திணறிய அஜித்!.. எல்லாமே அந்த நடிகைக்காகத்தானாம்!..
விஜயின் நடிப்பில் வெளியான லியோ படம் ஜெயிலரின் வசூலை தாண்டவில்லை என்றே சொல்லப்படுகிறது. எனவே, நான்தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என ரஜினி காட்டிவிட்டார். இப்போது ரஜினி ஞானவேல் இயக்கத்திலும், விஜய் வெங்கட்பிரபு இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில், இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ஒரே நேரத்தில் நடந்துள்ளது. ரஜினி அருகில் இருக்கும்போது நாம் இங்கே எதுக்கு என நினைத்த விஜய் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டாராம். தற்போது வேறு இடத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லியோ பட வெற்றி விழாவில் பேசிய விஜய் சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என பேசியிருந்தார். அப்படி பேசிய விஜய் மனதில் எதுவுமில்லை எனில் ஏன் ரஜினிக்காக படப்பிடிப்பை தளத்தை மாற்றவேண்டும் என திரையுலகில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டா இதுக்குத்தான் பழகுனியானு கேட்பாரு? அஜித்துக்கும் இந்த சீரியல் நடிகருக்கும் இப்படி ஒரு நட்பா?
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…