×

கங்கனாவிற்கு முடிவு கட்டுதா பாலிவுட்? அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் மனைவி!

பாலியல் விவகாரத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் மனைவி

 

பாலியல் விவகாரத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் மனைவி

இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாக நடிகை பயல் கோஷ் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார்.இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து நடிகை கங்கனா ரனாவத்தும்,  தன்னையும் அனுராக் வலுக்கட்டாயப்படுத்தி உறவுக்கொள்ள முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து பாலிவுட் திரையுலகினர் பலரும் அனுராக் காஷ்யப்பிறகு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது முன்னாள் மனைவியான கல்கி கோச்சலினின்,  " ஊடகம் ஒரு சர்க்கஸ் போன்றது. அதற்குள் நீங்கள் வரவேண்டாம். எப்போதும் உங்களது படங்களில் பெண் சுதந்திரம் பற்றி  போராடி இருக்கிறீர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நீங்கம் மிகவும் நேர்மையானவர்.

பெண்களை சமமாக பார்க்கும் வெகுசில ஆண்களில் ஒருவர் நீங்கள். நம் திருமணத்திற்கு முன்பும் சரி விவாகரத்திற்கு பிறகும் சரி நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர். எல்லோரும் தவறான தகவல்களை கூறி ஒருவரை குற்றம் சுமத்துவதால் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை அழிகிறது.

எனவே நீங்கள் தைரியமாக இருங்கள். இதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். கண்ணியமான வேலையை மீண்டும் தொடங்குங்கள் என கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இப்படி எல்லோரும் ஒன்று கூடி அனுராக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதால் கங்கனா,  பயல் கோஷ் போன்றவர்கள் பாலிவுட்டில் பெரும் பின் விளைவுகளை சந்திக்கக்கூடும் என பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News