×

கள்ளக்காதலனுக்கு தனது மகளையே திருமணம் செய்து வைத்த பெண் – முதல் மனைவியின் பரிதாப நிலை !

சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் மீண்டும் ஒரு 19 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஞானமணி நகரை சேர்ந்தவர் கண்ணன் 48. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் இவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பல முறை அவரது மனைவி போலிஸில் புகார் அளித்து கண்ணனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கண்ணனுக்கு செங்கல்பட்டை சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரது மனைவிக்குத் தெரிந்து பிரச்சனை ஆகியுள்ளது. இதனால் யுவராணி, கண்ணன் தன்னைவிட்டு பிரிந்து விடுவாரோ என்று அஞ்சி தன் 19 வயது மகளையே அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் அறிந்து கண்ணனின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளிக்க அந்த 19 வயது பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் கண்ணன் முதல் மனைவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதையடுத்து சில நாட்களிலேயே அங்கிருந்து அவர் சென்றுள்ளார். அதன் பின்னர் தன் மனைவிக்கு போன் செய்து அவருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் கண்ணனின் மனைவி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து கண்ணனின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News