Cinema News
200 கோடி போச்சி!.. லியோ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!. ஜெயிலர தாண்டுறது கஷ்டம்தான்!..
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. ஏனெனில் மாஸ்டர் படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். சமீபகாலமாக கேங்ஸ்டர் படங்கள் பேன் இண்டியா அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
கேஜிஎப், விக்ரம், ஜெயிலர் என பல படங்கள் பல் நூறு கோடி வசூலை செய்து சாதனை படைத்து திரையுலகினருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனவே, லியோ படமும் அந்த அளவுக்கு அல்லது அதன் வசூலை தாண்டி வசூலிக்க வேண்டும் என அப்படக்குழு ஆசைப்படுகிறது. அதில் ஒன்றும் தவறு இல்லை.
இதையும் படிங்க: ”கீப் காம் அண்ட் ப்ரீப்பேர் ஃபார் பேட்டில்”.. அப்டேட் ரேஸில் புது ஐடியா பிடித்த லியோ படக்குழு! அடடா!
ஆனால், அது நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. ஏனெனில். ஒருபக்கம் ஜெயிலர் படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் ரூ.900 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, லியோ படம் ரூ.1000 கோடி வசூலை தாண்ட வேண்டும் என விஜய், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்ரும் விஜயின் ரசிகர்கள் என எல்லோருமே எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் சிலர் பேச, ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையெல்லாம் சொல்லி அதிர வைத்துவிட்டார். மேலும், ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டால் எப்போதும் நான்தான் சூப்பர்ஸ்டார் எனவும் காட்டிவிட்டார்.
இதையும் படிங்க: லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..
எனவே, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் விஜய் இருக்கிறார். இந்நிலையில்தான் ஒரு செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது. பொதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வட மாநிலங்களிலும் தமிழ் மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பல நூறு தியேட்டர்களில் வெளியாகும். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ஆனால், ஹிந்தி வெர்சனை வெளியிடும் மும்பை நிறுவனம் படம் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் போட வேண்டும் என சொல்ல லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷன் வெளியாகவில்லை. எனவே, வட இந்தியாவிலும் தமிழில் மட்டுமே லியோ வெளியாகவுள்ளது. இதில், கிட்டத்தட்ட ரூ.200 கோடி லாபம் போச்சி என சொல்லப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும்போது லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை தாண்டுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சைலண்டா இருந்து அடிப்பேன்!.. மிரட்டலாக வெளிவந்த லியோ போஸ்டர்… இனி சரவெடிதான்…