More
Categories: Cinema News latest news

லியோ இத்தனை கோடி வசூல்னு நல்லா வடை சுடுறீங்க!.. புள்ளிவிபரத்தோடு புட்டு வைக்கும் புள்ளிங்கோ!…

Leo Collection: விஜய் ரசிகர்களும், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு பேரின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அட்வான்ஸ் புக்கிங் செய்தனர். இந்த படம் உருவானது முதலே இப்படம் பற்றி செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். படம் 19ம் தேதி வெளியாகிறது என்றதும் ஹைப் எகிறியது. அதோடு, இப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதோடு, இப்படத்தில் விஜயின் லுக்கை பார்க்கும்போது பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜாக இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: வாரேவா!.. லியோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!.. தயாரிப்பாளருக்கு போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா?..

ஒருபக்கம், A history of violence எனும் ஆங்கில படத்தின் தழுவல்தான் இந்த படம் எனவும் செய்திகள் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் இந்த படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவே வெளியானது. பொதுவாக, விஜய், அஜித், ரஜினி போன்ற அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் நாளே இத்தனை கோடி வசூல்.. அத்தனை கோடி வசூல் என பல பொய்யான தகவல்களை வழக்கம்போல் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கினர்.

இப்போதெல்லாம் தயாரிப்பாளர்களே கூட படம் ஓட வேண்டும் என்பதற்காக இத்தனை கோடி வசூல் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க துவங்கிவிட்டனர். சிம்பு நடித்து வெளியான பத்து தலை பட ரிலீஸின்போதும் படம் வெற்றி என கேக் வெட்டி கொண்டாடினர். ஆனால். அந்த படம் ஓடவே இல்லை. இத்தனை கோடி வசூல் என தயாரிப்பாளர்கள் சொல்வது உண்மையா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அதுவும் படம் வெளியாகி அடுத்தநாளே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் என அடித்துவிடுகின்றனர்.

இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் அப்படியே பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

ஆனால், இந்த செய்தியெல்லாம் உண்மையில்லை. ஒரேநாளில் இவ்வளவு கோடி வசூல் செய்ய வாய்ப்பில்லை என சினிமாவில் பல வருடங்களாக இருப்பவர்கள் ஒருபக்கம் கூறி வருகின்றனர். நேற்று வெளியான லியோ உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்துவிட்டதாக அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை என பலரும் பதிவிட்டனர். அதுவும் ‘ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி முதல் நாளே ரூ.120 கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆனால், வெறும் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான லியோ எப்படி 148 கோடி எப்படி வசூல் செய்யும்?. நல்லா வடை சுடுறாங்க’ என புள்ளிவிபரத்தோடு புள்ளிங்கோ கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் – மிரள வைக்கும் ரஜினி171

Published by
சிவா

Recent Posts