சைலண்டா இருந்து அடிப்பேன்!.. மிரட்டலாக வெளிவந்த லியோ போஸ்டர்… இனி சரவெடிதான்…

0
323
leo movie

Actor vijay: நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய். பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான இவர் தனது குழந்தைபருவத்திலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவரது படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் சினிமாவில் ஜொலிக்கவும் ஆரம்பித்தார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை தேடி தந்தது.

இதையும் படிங்க:விஜய்யோட ஹீரோயினை மட்டுமில்லை!… வில்லனையும் ஆட்டைய போட்ட அஜித்!.. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க!..

பின் பல பட தோல்விக்குபின் இவர் நடித்த கில்லி திரைப்படத்தின் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்றார். அதன்பின் நண்பன், தெறி, மாஸ்டர் போன்ற பல வெற்றி படங்களையும் தந்தார். இவர் சமீபத்தில் அரசியல் சார்ந்த பல பணிகளை செய்து வருகிறார். தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகிறார்.

இவர் தற்போது மாநகரம், விக்ரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் தாஸ், மிஷ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?

இப்படத்தின் ப்ரீ புக்கிங் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது. கிட்டதட்ட 23000 டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் லண்டன் போன்ற நாடுகளிலும் இதன் கலெக்‌ஷன்கள் எட்டா உயரத்தை எட்டியுள்ளது. இப்படம் வசூலிலும் பெரிய சாதனை புரியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

leo
leo movie poster

இப்படத்தின் கன்னட, தெலுங்கு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியானதை அடுத்து இதன் தமிழ் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. “KEEP CALM AND PREPARE FOR BATTLE”  எனும் வசனத்துடன் வெளியான இந்த போஸ்டரை  பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் எப்போது வெளியாகும் எனும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

google news