Connect with us

Cinema News

பெண்கள் கிட்ட ரொம்ப கெட்ட பேரு வாங்கிட்டேன்!.. அடுத்து இதைத்தான் பண்ணப் போறேன்!.. சிங்கம்புலி உறுதி!

மகாராஜா படத்தில் சபலம் நிறைந்த நபராக சிங்கம் புலி நடித்த நிலையில் படத்தை தியேட்டரில் பார்க்கும் பெண் ரசிகைகள் பலரும் தன்னை ரொம்பவே திட்டி வருகின்றனர் என மிகவும் வருத்தத்துடன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் நித்திலன் ஆரம்பத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் தனக்கு கொடுத்த போது ஒரு வாரம் கழித்து சொல்கிறேன் என்றேன். 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின்னர் நண்பர் நட்டி பண்ண சொன்னார். ஹீரோ விஜய் சேதுபதியும் நீங்க பண்ணுங்க நல்லா இருக்கும் என்றார். எல்லாருமே சொல்றாங்களே என யோசித்து அந்த கதாபாத்திரத்தில் நடித்த சம்மதித்தேன் என சிங்கம் புலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் சொன்ன சிம்பு

நகைச்சுவை நடிகராக பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நாகேஷ் கமல்ஹாசன் சொன்னதைக் கேட்டு அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஸ்ரீவித்யா வாயில் விஷத்தை ஊற்றும் கொடூரமான காட்சிகளில் நடித்திருப்பார். அவங்க எல்லாம் எவ்வளவோ செய்துவிட்ட நிலையில், நாமும் நடித்து தான் பார்ப்போமே என நடித்தேன். ஆனால், பலரும் அந்த கதாபாத்திரத்தை ரியலாக நினைத்துக் கொண்டு என்னை அதிகம் திட்டி வருகின்றனர்.

நானா படேகர் நாடகத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் செருப்புகளை வீச, அதை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு இதுதான் எனக்கு கிரீடம் என்றார். அது போலத்தான் இதுதான் என் நடிப்புக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்கிறேன் என சிங்கம்புலி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் நடித்த பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நம்பவே முடியலயேப்பா!…

நடிகர் சூரியை முதன் முதலில் கவுண்டமணியுடன் நடிக்க வைத்தேன். இன்றைக்கு அவரது வளர்ச்சியை பார்க்க ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. சேதுபதியுடன் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படத்திலும் நடித்து வருகிறேன் எனக் கூறிய சிங்கம்புலி சீக்கிரமே புதிய படம் ஒன்று இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

சூர்யாவின் மாயாவி படத்தை இயக்கியவரே சிங்கம்புலி தான். நடிகர் அஜித் குமாரை வைத்து ரெட் படத்தை இயக்கிய வரும் இவர்தான். பல ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் காமெடி நடிகராக நடித்து வரும் நிலையில், மீண்டும் இயக்குனராக போவதாக முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: சரக்கு ஊற்றி!.. அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட தம்பி ராமையா மகன்!.. ஒரே மஜா தான் போல!..

google news
Continue Reading

More in Cinema News

To Top