Connect with us
major sundar

Cinema History

சாப்பாட்டை பற்றிக் கேட்ட மேஜரை அதிர்ச்சி அடையச் செய்த புரட்சித்தலைவர்… அப்படி என்னதான் சொன்னார்?

புரட்சித்தலைவர் எம்ஜிஆருடனான நினைவுகளை நடிகர் மேஜர் சுந்தரராஜன் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

ஒருமுறை தேவர் பிலிம்சின் விவசாயி படம் சூட்டிங் நடந்தது. நாளைக்கு என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள் என்று தேவரிடம் கேட்டேன். நீங்கள் கூழ் குடிக்கும் காட்சி என்றார். அப்படியா கூழ் நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் எம்ஜிஆர்.

சரி. தெய்வமே… நீ என்னைக் கொண்டு வந்தாலும் சரிதான் என்றார் தேவர். இருவரும் ரொம்ப உரிமையோடு பேசிக் கொள்வார்கள். மறுநாள் காலை 14 பெரிய பிளாஸ்க் வந்தது. இதுல என்ன இருக்குன்னு கேட்டேன்.

கூழ். அதாவது கல்கண்டு பால். இதைப் பார்த்தால் கூழ் மாதிரி தான் இருக்கும். அப்போது மேலே வேலை செய்து கொண்டு இருக்கும் லைட் பாய்ஸ் எல்லாரையும் வரச் சொல்லுங்கன்னு சொல்லி முதலில் அவங்களுக்குக் கூழ் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

அப்புறமா எம்ஜிஆரும் நானும் கூழ் குடிக்கிற காட்சி எடுக்கப்பட்டது. தான் சாப்பிடுற அந்த கூழை 100 பேருக்காவது கொடுத்திருப்பார். சரி. எப்போதும்… இப்படி ரிச்சா சாப்பிடுவார் போல இருக்குன்னு நினைச்சேன்.

இப்படி தான் இன்னொரு தடவை நான் ஏன் பிறந்தேன் சூட்டிங் நடந்தது. அப்போது நைட் 12 மணி இருக்கும். 16 வகை பதார்த்தங்களோடு சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. எம்ஜிஆரும், நானும் சாப்பிட்டோம். அப்போ நான் கேட்டேன்.

தினமும் 16 வகை பதார்த்தங்களோடு சாப்பிடுவீர்களா என்று. அவர் சொன்னது என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அதற்கு எனக்கு இப்படியும் சாப்பிடத் தெரியும். வெறும் கூழ் மட்டும் குடிக்கவும் தெரியும்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

என் தாய் என்னை அப்படி வளர்த்திருக்காங்க. எந்த ஒரு சாப்பாட்டிற்கும் தயார். வெறும் சுட்ட அப்பளமும் வத்தக்குழம்பும் இருந்தாலும் போதும். நான் சாப்பிட்டு விடுவேன்.

வெறும் கூழ் குடித்துக் கொண்டு இருக்க முடியும். பல நாள்கள் எதுவும் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டும் படுத்துக் கொள்வதும் எனக்குப் பழக்கம் என்றார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top