தக் லைஃப் படத்திற்கு குடைச்சல் கொடுக்கும் கமல்ஹாசன்!.. கடுப்பில் மணிரத்னம்!.. இதெல்லாம் நியாயமா?!..

by சிவா |
thug life
X

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் கமல்ஹாசனின் மார்க்கெட் மீண்டும் மேலே ஏறியிருக்கிறது. விக்ரம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து கமலுக்கு உற்சாகத்தை கொடுத்தது. விக்ரம் படத்திற்கு முன் 4 வருடங்கள் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கவில்லை. அதாவது விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என ரூட்டை மாற்றினார். அதோடு, இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், விக்ரம் படத்தின் வெற்றி அவரை மீண்டும் சினிமாவில் இயங்க வைத்துவிட்டது. விக்ரம் ஹிட்டுக்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, வினோத் இயக்கத்தில் ஒரு படம், ஒருபக்கம் கல்கி என பிஸி ஆனார்.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு விகடன் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா? கொடுத்த அட்வைஸையும் பாருங்க

இதில், வினோத் படம் மட்டும் டிராப் ஆகிவிட்டது. கல்கி முதல் பாகமும், இந்தியன் 2-வும் வெளியானது. தக் லைப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியன் 2 படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. எனவே, எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் சிம்பு படம் டேக் ஆப் ஆகவில்லை. சிவகார்த்திகேயனின் அமரன் படம் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: நைட் ஃபுல்லா வச்சு பொளக்குறான்! இதுதான் பிரச்சினை.. சாண்டியுடனான உறவை பற்றி வாய்திறந்த முன்னாள் மனைவி

கமல் இப்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் என 3 நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது. ப்ரீ புரெடெக்‌ஷன் அதாவது முன் தயாரிப்பு பணிகளுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் பணம் கொடுத்துவிட, ஷூட்டிங் செலவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செய்து வருகிறது.

அடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பணம் கொடுக்க வேண்டும். ஆனால், ராஜகமல் பிலிம்ஸில் இருந்து எந்த பணமும் போகவில்லையாம். இதனால் படப்பிடிப்பை நடக்காமல் நின்று போயிருப்பதாக சொல்லப்படுகிறது. கமல் தனக்கு மாமனார் என்பதால் இதை எப்படி சரி செய்வது என யோசித்து வருகிறாராம் மணிரத்னம்.

Next Story