Cinema History
சூப்பர் ஹிட் படத்தை இயக்க வந்த வாய்ப்பு!.. இரண்டு முறையும் மறுத்த மனோபாலா.. அட அந்த படமா?!..
Manobala: ஒல்லி தேகம், சிரித்த முகம், காமெடி நடிகர் இவை வைத்தே இந்த தலைமுறை மனோபாலாவை பற்றி தெரிந்து வைத்து இருக்கிறது. ஆனால் இயக்கத்தில் அவர் படு ஸ்மார்ட். தமிழில் மட்டும் அல்ல இந்தி படங்களையும் இயக்கி இருக்கிறார். கோலிவுட்டின் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தினை இயக்க இருமுறை வந்த வாய்ப்பினையும் தட்டி விட்டார்.
1979ம் ஆண்டு கமல்ஹாசன் செய்த பரிந்துரையின் பேரில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானவர் மனோபாலா. மூன்றே வருடத்தில் அவர் இயக்கிய ஆகாய கங்கை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ஆனால் அடுத்து இயக்கிய பிள்ளை நிலா மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படிங்க: அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!
இதை தொடர்ந்து ஊர்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், தூரத்து பச்சை உள்ளிட்ட படங்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு இந்தியில் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படத்தின் இந்தி ரீமேக் தான் அது.
அந்த நேரத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கிழக்கு வாசல் படத்தினை இயக்கும் வாய்ப்பும் மனோபாலாவுக்கு தான் வந்தது. ஆனால் அவர் இந்தி படத்துக்கு ஓகே சொல்லிவிட்டு கிழக்கு வாசலை மறுத்து விட்டார். அதன் பிறகே ஆர்.பி.உதயகுமார் அந்த படத்தினை இயக்கினார். படம் ஒரே மூச்சாக நடந்து விடவில்லை. நிறைய தடங்கல் நடந்தது. ஒரு கட்டத்தில் உதயகுமாருக்கே பெரிய விபத்து நடந்து மருத்துவமனையில் இருந்தார்.
இதையும் படிங்க: டிரெய்லரை இத்தனை தடவை பார்த்தாரா? லோகேஷுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த விஜய்- அப்படி என்னவா இருக்கும்?
மனோபாலா தன்னுடைய படத்தினை முடித்துவிட்டு கோலிவுட் திரும்பி விட்டார். அவரை அழைத்த சத்யஜோதி ப்லிம்ஸ் முதலில் நீங்கள் தான் இந்த படத்தினை இயக்க இருந்தது. இப்போ நீங்களே முடித்து தாங்க எனக் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் உதயகுமார் தான் இயக்கி இருக்கிறார். நான் முடிப்பது சரியாகாது. இரண்டு மாசம் தானே பொறுத்துக்கோங்க என்றாராம்.
அதை தொடர்ந்து உதயகுமார் குணமாகி வந்து இந்த படத்தினை முடித்து கொடுத்தார். படமும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி விழாவில் இந்த படத்தின் வெற்றியினை மனோபாலாவுக்கு சமர்பித்தார் உதயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.