Connect with us

Cinema History

மனோபாலா ஒரு நாளைக்கு இவ்வளவு சிகரெட் பிடிப்பாரா?… கேட்கவே அதிர்ச்சியா இருக்கே!!

மனோபாலா கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உடல் நிலை மோசமானதால் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தார். அவரது இறப்பிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவை ஒரு காமெடி நடிகராகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.

தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “கல்லுக்குள் ஈரம்”, “டிக் டிக் டிக்” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். அதன் பின் “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியால் மனம் உடைந்து போனார் மனோபாலா. அதன் பின் நடிகர் மைக் மோகன் மனோபாலாவுக்கு உதவ முன் வந்தார். அவர் கொடுத்த கால் ஷீட் நாட்களில் அவரை வைத்து “பிள்ளை நிலா” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

“பிள்ளை நிலா” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அதனை தொடர்து “என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்”, “ஊர்காவலன்”, “மல்லு வேட்டி மைனர்” போன்ற பல வெற்றித்திரைப்படங்களை இயக்கினார். மேலும் அதே சமயத்தில் பல திரைப்படங்களிலும் நடித்தார்.

மனோபாலாவுக்கு அளவுக்கு அதிகமான புகைப்பழக்கம் இருந்திருக்கிறது. இது குறித்து அவரே ஒரு பேட்டியில், “எனக்கு சிகரெட் பிடிக்கலைன்னா கைகால் எல்லாம் நடுங்கிப்போய்டும்” என கூறியிருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகளுக்கு மேல் பிடிப்பாராம். அதன் பின் ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவர், “இனி ஒரு சிகரெட் பிடித்தாலும் உயிருக்கு ஆபத்து” என்று கூறிய பிறகுதான் புகைப்பழக்கத்தை கைவிட்டாராம்.

மனோபாலா பணியாற்றும் திரைப்படங்களில் உதவி இயக்குனர்கள் யாராவது சிகரெட் பிடித்தால், அவர்களிடம் “சிகரெட் பிடிக்காதீங்கடா” என அட்வைஸ் செய்வாராம் மனோபாலா. இவ்வாறு புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து ஒரு கட்டத்தில் அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் மனோபாலா.

இதையும் படிங்க: இனி அவரை நேருக்கு நேர் பாக்குறதே கஷ்டம்..! இசையமைப்பாளர் இமானிடம் சண்டை செய்த சிவகார்த்திகேயன்…

google news
Continue Reading

More in Cinema History

To Top