ரசிகர்களிடம் லைக்ஸை குவிக்கும் மீசைய முறுக்கு 2 நடிகையின் ஸ்டில்ஸ்!
சைத்ரா.ஜே.ஆச்சார் நடித்துள்ள புதிய படம் ‘மீசைய முறுக்கு 2’.

‘மஹிரா’ என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் சைத்ரா.ஜே.ஆச்சார். மகேஷ் கௌடா இயக்கியிருந்த இந்தப் படத்தில் ஹீரோவாக ராஜ்.பி.ஷெட்டி நடித்திருந்தார்.

அதன் பிறகு சைத்ரா பல கன்னட படங்களில் நடித்தார். இவரை தமிழ் திரையுலகத்துக்கு அழைத்து வந்த படம் தான் ‘3BHK’. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஶ்ரீ கணேஷ் இதை இயக்கினார்.

தற்போது, சைத்ரா.ஜே.ஆச்சார் நடிப்பில் உருவாகி உள்ள புதிய தமிழ் படம் ‘மீசைய முறுக்கு 2’. இந்த படத்தை இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.

இப்படத்தை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சைத்ரா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.















