பகுத்தறிவு கட்சியில் இருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஜோதிட நம்பிக்கை!.. ஆச்சர்ய தகவல்!..

by சிவா |   ( Updated:2024-06-19 00:51:14  )
mgr
X

எம்.ஜி.ஆர் வாலிப வயதில் காங்கிரஸ் கட்சியின் அபிமானியாக இருந்தார். அவர் நடிகராக வளர்ந்த நேரத்தில் அறிஞர் அண்ணாவின் அரசியல் தமிழகத்தில் சூடு பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கினார் அண்ணா. அதில், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியும் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.

அண்ணாவின் வளமையான தமிழும், சொற்களை அவர் கையாளும் விதமும், அவரின் மேடைப்பேச்சும் பலரையும் அந்த கட்சியை நோக்கி இழுத்தது. அப்படி இழுக்கப்பட்ட பலரில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர். எனவே, எம்.ஜி.ஆரும் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார். அது பகுத்தறிவு கட்சி என்பதால் எம்.ஜி.ஆர் சினிமாவில் சாமி கும்பிடுவது போலவோ, நெற்றியில் திருநீர் வைத்தோ நடிக்க மாட்டார். கடவுளை பற்றி வசனம் பேச மாட்டார். இதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.

இதையும் படிங்க: இவர் ஹீரோன்னா படத்தை வாங்க மாட்டோம்!.. முதல் படத்தில் வந்த நெருக்கடி!.. மனமுடைந்த எம்.ஜி.ஆர்…

அதேநேரம், சில பாடல்களில் இறைவன், கடவுள் என்கிற வார்த்தைகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடித்தபோது ‘இது அல்லாவின் மீது ஆணை’ என்கிற வசனத்தை பேச விருப்பமில்லாமல் ‘இது அம்மா மீது ஆணை’ என சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால், இயக்குனர் அதை ஏற்கவில்லை என்பதால் ‘அல்லாவின் மீது ஆணை’ என்றே பேசினார் எம்.ஜி.ஆர்.

இப்படி பகுத்தறிவு கொள்கைகளை கடை பிடித்தவர்தான் எம்.ஜி.ஆர். ஆனால், அவருக்கு ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இருந்தது என்கிற ஆச்சர்ய தகவலை இங்கே பார்ப்போம். ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ்.வாசன் எம்.ஜி.ஆரை வைத்து ‘ஒளி விளக்கு’ என்கிற படத்தை தயாரிப்பது உறுதியானது.

இதையும் படிங்க: இனிமே எம்.ஜி.ஆர் அவ்வளவுதான்!.. கைவிட்ட சினிமா உலகம்!.. அப்புறம் நடந்தது இதுதான்!..

எனவே, தனது மகன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியத்தை அழைத்து எம்.ஜி.ஆரை போனில் தொடர்பு கால்ஷீட் தொடர்பாக நேரில் பேச வருவது பற்றி ஆலோசிக்க சொன்னார். அவர் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு போன் செய்து ‘ஒளி விளக்கு படம் தொடர்பாக உங்களிடம் நேரில் பேச வேண்டும். நாளை நான் உங்கள் வீட்டுக்கு வரட்டுமா?’ என கேட்டிருக்கிறார்.

அதற்கு எம்.ஜி.ஆர் ‘நாளை அஷ்டமி.. அடுத்த நாள் நவமி. எனவே இந்த இரண்டு நாளும் வேண்டாம். அடுத்த நாள் வாருங்கள்’ என சொன்னாராம் எம்.ஜி.ஆர். இந்த தகவலை எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம் ஆனந்த விகடனில் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

Next Story