Cinema History
Actor Nagesh: திட்டிய இயக்குனர்!.. புலம்பிய நாகேஷ்!.. எம்.ஆர்.ராதா சொன்ன அந்த வார்த்தை….
Nagesh: 60களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். இவரின் அம்மா தமிழ்நாட்டையும், அப்பா கர்நாடகாவையும் சேர்ந்தவர். அப்போது கோவை மாவட்டத்தில் இருந்த தர்மாபுரத்தில் பிறந்தவர் நாகேஷ். நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின் இந்திய ரயில்வேயில் கிளார்க்காக சேர்ந்தார். வேலை முடிந்து பின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடினார். சில நாடகங்களில் நடித்தார். சினிமாவில் வாய்ப்பு தேட அவரின் கிளார்க் வேலை தடையாக இருந்தது. எனவே, வேலையை ராஜினாமா செய்துவிட்டு வாய்ப்பு தேடினார்.
இதையும் படிங்க: உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!…
சென்னை தேனாம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடினார். அப்போது அவரின் அறையில் கவிஞர் வாலியும் தங்கி சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு தேடினார். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துமே அவசரப்பட்டு வேலையை விட்டுவிட்டார். ஆனால், அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு சின்ன வேடம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
எப்படியோ போராடி வாய்ப்புகளை பெற்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நாகேஷ். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் என அப்போது முன்னணியில் இருந்த நடிகர்களின் படங்களில் நாகேஷ்தான் நகைச்சுவை நடிகர். ஒரு நாளில் 3 படங்களில் எல்லாம் நடிப்பார். இவருக்காக சிவாஜி, எம்.ஜி.ஆரெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் காத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… 52 தடவை ஜெயிலுக்குப் போன நடிகவேள்!
காமெடி மட்டுமல்ல. குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். நடிகர் கமல் எப்போதும் நாகேஷ் பற்றி பெருமையாக பேசுவார். நாகேஷ் போல ஒரு சிறந்த நடிகரை பார்க்க முடியாது என சொல்லுவார். 1958 முதல் 2008 வரை ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
தாமரைக்குளம் எனும் திரைப்படத்தில்தான் நாகேஷுக்கு முதன் முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படப்பிடிப்பில் அவர் சரியாக நடிக்கவில்லை என எல்லோரும் திட்டியிருக்கிறார்கள். இதை அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த எம்.ஆர்.ராதாவிடம் நாகேஷ் சொல்ல அவரோ ‘டேய்.. மத்தவன் எல்லாம் நடிகன்.. நீ மட்டும்தான் கலைஞன்.. கவலைப்படாமல் நடி’ என ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
இப்படி நாகேஷுக்கு சரியான நேரத்தில் நம்பிக்கை கொடுத்து தூக்கிவிட்டவர் எம்.ஆர்.ராதா என்பது குறிப்பிடத்தக்கது.