Cinema News
விஜய் இத மாத்தலைனா நான் கண்டிப்பா கேள்வி கேட்பேன்.. ஆரம்பமே அமர்க்களம்தான் போல
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். எம்ஜிஆர், ரஜினி இவர்கள் வரிசையில் அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக விஜய் இருந்து வருகிறார். உலகெங்கிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் விஜய்க்காக சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்தளவு உச்சத்தில் இருக்கும் போதே விஜய் தனது அரசியல் எண்டிரியை உறுதி செய்துள்ளார். தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தோடு தனது சினிமா கெரியரை முடித்துக் கொள்வதாகவும் அதன் பிறகு தன் முழுக் கவனத்தையும் அரசியலில் செலுத்த போவதாகவும் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்த முடிச்சி விட்டாங்கப்பா.. பாக்கியாவுக்கு தான் இதிலும் சோதனையா?
தனது கட்சியின் பெயரை சமீபத்தில்தான் விஜய் அறிவித்திருந்தார். அந்தக் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் பெயரிலேயே மிகப்பெரும் தோல்வி கண்ட கட்சியாக விஜயின் கட்சி மாறியது தான் கொடுமை.
அவர் கட்சியின் பெயரில் ‘க்’ பிழை இருந்ததை அவர் கவனிக்கவில்லை போலும். அதனால் ஏகப்பட்ட விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிட்டது. நடிகை கஸ்தூரி கூட ‘ஒரு க் விட்டுட்டாங்க. கட்சி பேரே அங்க தோற்றுவிட்டது. இதன் பிறகு அவர் வந்து என்ன செய்ய போகிறார்’ என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூட இது பற்றி ஒரு விஷயம் கூறியிருந்தார். அதாவது ‘ மேடை பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் என அனைவருக்கும் இந்த ஒற்றுப்பிழை வந்து கொண்டுதான் இருக்கின்றது.’
‘யாருமே பிழையில்லாமல் பேசவும் முடியாது. எழுதவும் முடியாது. ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் சாதாரண நடிகராக இருந்து அரசியலுக்குள் வரும் போது கூட இருக்கிறவர்கள் நன்கு தமிழ் பேசுபவர்களாகவும் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். அவர்கள்தான் இந்த தலைப்பை பரிசீலனை செய்திருக்க வேண்டும். ’
இதையும் படிங்க: ரஜினி சம்பளம் 40 கோடியாம்!.. லால் சலாம் முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?.. லைகா தலையில துண்டு தான் போல!
‘இது விஜயின் தவறாக நான் பார்க்க வில்லை. எப்பொழுது அவர் தவறாக மாற வாய்ப்பிருக்கிறது என்றால் இதுக்கு மேலேயும் அந்த பிழையை விஜய் சரிசெய்யவில்லை என்றால் அப்பொழுதுதான் அவரின் தவறாக கருதப்படும். கண்டிப்பாக இதை விஜய் மாற்ற வேண்டும். ஒரு தமிழ் மொழியில் உள்ள சிறு தவறை கூட மாற்ற முடியாத விஜயால் எப்படி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும். இதை பற்றி நான் கண்டிப்பாக கேள்வி கேட்பேன்’ என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.