பாரதிராஜா படத்துக்கு மூணே நாள் ஒளிப்பதிவு செஞ்சிட்டு விலகினாரா நட்டி?

‘சதுரங்க வேட்டை’ நட்டி பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Bharathiraja Natty

2008-ல் தமிழில் வெளியான படம் ‘பொம்மலாட்டம்.’ இந்த படத்தை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தான் இயக்கினார். இதில் நானா படேகர் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடித்திருந்தார்கள்.

இதற்கு பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். முதலில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக கமிட்டாகி பின் விலகியவர் ‘சதுரங்க வேட்டை’ நட்டி. இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, மிக பிரபலமான ஒளிப்பதிவாளரும் கூட.

சமீபத்தில், நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி கொடுத்த பேட்டியில் ‘பொம்மலாட்டம்’ படம் குறித்து பேசுகையில் “பாரதிராஜா சார் என்னை நேர்ல கூப்பிட்டு ‘பொம்மலாட்டம்’ படத்தோட ஸ்கிரிப்ட் பத்தி சொல்லிட்டு என்ன அதுக்கு ஒளிப்பதிவு பண்ண சொன்னாரு.

அப்போ நான் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி சாரோட ‘ஹல்லா போல்’-ங்குற ஹிந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்சிட்டு இருந்தேன். இடையில ஷூட்டிங் கொஞ்சம் தள்ளி போச்சு. அப்போ, பாரதிராஜா சார் வந்து ராஜ்குமார் சந்தோஷி சார்கிட்ட பேசினாரு.

அவர்கிட்ட பேசிட்டேன், அவர் உன்னைய ‘பொம்மலாட்டம்’ பண்ண சொன்னாருன்னு பாரதிராஜா சார் சொன்னாரு. உடனே, ‘பொம்மலாட்டம்’ ஷூட்டிங் ஆரம்பிச்சு மூணு நாள் நான் வொர்க் பண்ணேன்.

அப்புறம் ராஜ்குமார் சந்தோஷி சார் போன் பண்ணி ‘ஹல்லா போல்’ படத்தோட ஷூட்டிங் மறுபடியும் ஆரம்பிக்கணும்ன்னு கூப்பிட்டாரு. பாரதிராஜா சார் பரவால்ல போயிட்டு வான்னு என்ன அனுப்பி வச்சாரு” என்று கூறியுள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →