உங்க கண்டீசனலாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க.. நயனுக்கு கல்தா கொடுத்த இயக்குனர்
Actress Nayanthara: தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய வளர்ச்சியை நிலைநிறுத்தி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான நயன்தாரா அடுத்தடுத்து விஜய் அஜித் ரஜினி என பெரிய பெரிய முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு பெரிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் அதன் பிறகு அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து மேலும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். திருமணத்திற்கு முன்பாகவே பெண்களை மையப்படுத்தி அமைந்த ஒரு சில படங்களின் நடித்ததன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார் நயன்.
இதையும் படிங்க: ஆல்ரெடி 2 பேர் படமும் அவுட்!.. கவுண்டமணியாவது தப்பிப்பாரா…?
இந்த நிலையில் தற்போது நயன் கவினுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோக மற்ற மொழி படங்களிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இதை தெரிந்த கோடம்பாக்கத்தில் உள்ள சில பேர் ஒருவேளை நயன் போட்ட கண்டிஷன் அங்கு ஒத்து வரவில்லையோ என்னவோ என கூறி வருகிறார்கள். ஏற்கனவே நயனை பொருத்தவரைக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் ஏகப்பட்ட கண்டிஷன்கள் உடன் தான் அவர் அந்த படத்தில் நடிப்பார். அதாவது குழந்தை பிறந்த பிறகு வெளிநாட்டில் ஷூட்டிங் என்றால் வரமாட்டார்.
இதையும் படிங்க: தொட்டதெல்லாம் டிராப்!.. இப்படியே போனா சூர்யா நிலைமை என்னாகுறது!.. அப்செட்டில் ரசிகர்கள்..
உள்ளூரிலேயே படப்பிடிப்பை வைத்துக் கொள்வோம் என்று சொல்வார். இப்படி ஏதாவது ஒரு கண்டிஷனை போட்டதனால் தான் நயன் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கலாம் என தெரிகிறது. அந்த படத்தில் இருந்து நயன்தாரா வெளியான பிறகு அவருக்கு பதிலாக ஹீரோயினாக சமந்தா உள்ளே நுழைந்து இருப்பதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமந்தாவை வைத்து கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.