நீங்களாம் மனுஷனா? முகமூடியை போட்டுக்கிட்டு நடிக்காதீங்க… தனுஷை போட்டு பொளந்த நயன்..

by Akhilan |   ( Updated:2024-11-16 02:37:56  )
nayandhanush
X

nayan_dhanush

Nayanthara: பொதுவாக மற்ற பிரபலங்கள் குறித்து எளிதாக வாய் திறந்து பேசாத நடிகை நயன்தாரா முதல்முறையாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு ஒன்று தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண டாக்குமென்டரி நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வெளியாகும் என திருமண சமயத்தில் கூறப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து இந்த ஆண்டு நவம்பர் நயன்தாராவின் பிறந்த நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து காட்டமாக வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் பரவி வருகிறது. அப்பதிவில் இருந்து, அன்புள்ள தனுஷிற்கு, பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இது உங்களுக்கு ஒரு திறந்த கடிதம். சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம். இந்த துறையில் எந்த தொடர்பும் இல்லாத சுயமாக உருவாக்கப்பட்ட ஒரு பெண். இதற்கு நான் போராடியது அதிகம்.

இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

நெட்ஃபிக்ஸ் டாக்குமெண்ட்ரி வெளியீடு நான் மட்டுமல்ல, எனது ரசிகர்கள் பலரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உங்கள் பழிவாங்கல் எனக்கும், என்னுடைய கணவருக்கும் இதற்காக முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த மக்களை பாதிக்கிறது. எங்கள் திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் பாடலை பயன்படுத்திக்கொள்ள NOC கேட்டு இரண்டு வருடங்கள் கழிந்தது. ஆனால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.

இதனால் தற்போதைய பதிப்பை திருத்தி வெளியிட முடிவெடுத்தோம். எங்கள் திருமணத்தில் பயன்படுத்த அந்த பாட்டை தவிர சிறந்தது வேறு இல்லை என உங்களுக்கு தெரிந்தும் அதை மறுத்தீர்கள். பணப்பிரச்சினைகளுக்கான இந்த முடிவென்றால் பரவாயில்லை. ஆனால் இது உங்களுக்கு எங்கள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பு. நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.

nayan

இதற்கிடையில் நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு உங்கள் நோட்டீஸ் சட்ட அறிவிப்பு இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் தனிப்பட்டு எடுத்த புகைப்படங்கள் குறித்த கேள்வி கூட அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுவும் சமூக ஊடகங்களில் ஏற்கனவே அதிகம் பகிரப்பட்ட BTS காட்சிகளுக்கு 10 கோடியை நஷ்ட ஈடாக கோரியது அதிர்ச்சியாகி உள்ளது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!

மேடையில் நீங்கள் சித்தரிக்கும் நபராக நீங்கள் பாதி கூட இல்லை. தயாரிப்பாளர் என்ன பேரரசரா? உங்கள் நோட்டீஸை நான் பெற்றுள்ளேன். அதற்கு சட்டப்பூர்வமான வழிகளில் நாங்கள் பதிலளிப்போம். எங்களின் நெட்பிளிக்ஸ் டாக்குமெண்ட்ரிக்கு நானும் ரவுடித்தான் படங்களை பயன்படுத்த NOC வழங்க மறுப்பது குறித்து நீதிமன்றத்திற்கு நீங்கள் நியாயப்படுத்தலாம். ஆனால் அதற்கு தார்மீகப் பக்கமும் இருப்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் ஒருவர் இவ்வளவு கொடூரமாக முகமூடியை போட்டுக் கொண்டு இருக்க முடியுமா? ஒரு தயாரிப்பாளராக உங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்த இப்படத்தின் வெளியீட்டிற்கு முன் நீங்கள் சொன்ன விஷயங்கள் இன்னும்ஆறாத வடுவாகி இருக்கிறது.

nayan

ஆனால் இப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டாகி உங்களுடைய ஈகோவை தூண்டிவிட்டது. அதனால் தான் படத்தின் விருது விழாவில் கூட உங்களின் அதிருப்தியை பலராலும் புரிந்து கொள்ள முடிந்தது. வணிக போட்டியை தவிர்த்து முக்கிய பிரபலங்கள் அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள். சரியான மனசாட்சி உள்ள எவரும் இத்தகைய கொடுங்கோன்மையை, உங்களைப் போன்ற ஆளுமையில் இருந்து வந்தாலும் பாராட்ட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story