Rayan: நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் திரைப்படம் ராயன். இப்படத்தின் வில்லன் மற்றும் ஷூட்டிங் அப்டேட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்த தனுஷ். முதல்முறையாக பவர் பாண்டி படத்தினை இயக்கி இருந்தார். அப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் மாஸ் ஹிட் அடித்தது. இதையடுத்து தொடர்ச்சியாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதையும் படிங்க: முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..
தற்போது பெரிய பிரேக்கிற்கு பிறகு, ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் முழுமுழுக்க இள பிரபலங்களை வைத்தே இயக்கப்பட இருக்கிறது. ஆனால் அப்படத்திற்கு நேர் மாறாக அமைக்கப்பட இருக்கிறது ராயன்.
இப்படத்தில் தனுஷுடன் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவாவை வில்லன் ரோலுக்கு தனுஷ் கேட்டு இருந்தார். ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் இல்லை எனக் கூறி மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…
தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படம் வடசென்னையை போல முழுக்க முழுக்க நார்த் மெட்ராஸை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஏராளமான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், ஜூன் மாதம் இப்படம் திரைக்கும் வரும் எனவும் கூறப்படுகிறது.
