Cinema History
எம்ஜிஆர் கிட்ட போனதான் ஜெயிக்க முடியும்! சிவாஜியின் சூப்பர் ஹிட் பாடலை எழுதிய கவிஞருக்கா இந்த நிலைமை?
MGR – Sivaji: சினிமாவை பொறுத்தவரைக்கும் காலங்காலமாக இருவராக சினிமாவை ஆட்சி செய்து கொண்டு வரும் நடைமுறை இருக்கிறது. இப்போது ரஜினி கமல், அஜித் விஜய் போன்று அந்த காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி என இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அந்த காலத்திலும் அவர்களுக்குள் தொழில் முனையில் போட்டி இருந்தாலும் நிஜத்தில் இருவரும் உண்மையான நண்பர்களாகவே பழகி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சிவாஜியிடம் வேலை பார்ப்பவர்கள் எம்ஜிஆரிடம் வேலை பார்க்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா பொழப்பு ஓடாது!.. அழகை காட்டி மயக்கும் பூஜா ஹெக்டே!…
எம்ஜிஆரிடம் வேலை பார்ப்பவர்கள் சிவாஜிக்கு வேலை பார்க்க மாட்டார்கள். அப்படி தனித்தனியாக க்ரூப் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக பல பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். சிவாஜி – பத்மினி நடிப்பில் வெளியான திரைப்படம் புதையல்.
இந்தப் படத்தில் மிகப் புகழ் பெற்ற பாடலான ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என்ற பாடலை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது. அந்தப் பாடலை எழுதியவர் ஆத்மநாதன். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
இதையும் படிங்க: இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை தவறவிட்ட கௌதம் கார்த்திக்! என்னது கதை பிடிக்கலயா?
இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் மெட்டு அமைத்ததும் இந்த பாடலுக்கு யார் எழுதப் போகிறார் என்று கேட்டாராம் கலைஞர் மு.கருணாநிதி. ஏனெனில் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை எழுதியவரே கலைஞர்தான். விஸ்வநாதன் நீங்களே சொல்லுங்க என கலைஞரை பார்த்து கேட்டிருக்கிறார்.
அதன் படி கலைஞர் சொன்ன கவிஞர்தான் ஆத்மநாதன். இதே போல் பல நல்ல பாடல்களை எழுதும் வாய்ப்பு ஆத்மநாதனுக்கு கிடைத்தாலும் அவரால் சினிமாவில் நல்ல இடத்தை அடையமுடியவில்லை. அதனால் அவரிடம் சில பேர் எம்ஜிஆரிடம் போய் சேர்ந்துவிடு. அப்போதுதான் நீ நினைத்த இடத்தை அடையமுடியும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை… தொடர் சிகிச்சையில் கேப்டன்.. மருத்துவமனை வெளியிட்ட ஷாக் அறிக்கை..!
அதன் படி ஆத்மநாதனும் எம்ஜிஆரிடம் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம். ஆனால் எம்ஜிஆரோ ‘உங்களை நான் சந்தித்ததில்லை என்றாலும் உங்களை பற்றி நன்கு அறிவேன்’ என கூறி தன் நல்லவன் வாழ்வான் திரைப்படத்தில் நீங்கள் பாடலை எழுதுங்கள் என வாய்ப்பு கொடுத்தாராம் எம்ஜிஆர்.
மேலும் உலக தமிழ் மாநாட்டிற்காக மதுரகவி என்ற நாட்டிய நாடகத்தை நடத்தினார் ஜெயலலிதா. அந்த நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்தவரும் ஆத்மநாதன்தான். மிகக் குறைந்த படங்களில் பணியாற்றியிருந்தாலும் நான்கு முதல்வர்களுடன் பணியாற்றிய கவிஞர் என்ற பெருமையை பெற்றவராக ஆத்மநாதன் விளங்கினார்.