Connect with us
kamal

Cinema History

சாதனை செய்த கமல்ஹாசன்!. விழாவுக்கு வர மறுத்த பிரபல நடிகர்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…

5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய திரைப்பயணம் இன்னமும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாலச்சந்தர் இவருக்கு பல வித்தியாசமான கதாபத்திரங்களை கொடுத்து நடிக்க வைத்தார். துவக்கத்தில் ரஜினியின் இணைந்து நடித்து வந்த கமல் ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

கமல்ஹாசன் படம் என்றாலே அது காதல் கதை என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு பல காதல் கதைகளில் நடித்து காதல் மன்னனாக மாறினார். இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் உருவானார்கள். ரஜினி ஒரு பக்கம் ஸ்டைலில் கலக்கினால், கமலோ வித்தியாசமான கதாபத்திரங்கள் மற்றும் கெட்டப்புகள் மூலம் கலக்கினார்.

இதையும் படிங்க: ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..

30 வயதிலேயே 60 வயது முதியவராக மேக்கப் போட்டு நடித்தவர் இவர். எப்போதும் திரைப்படங்களில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் இவர். அதனால்தான், ராஜபார்வை, நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, குணா, குருதிப்புனல், தசாவதாரம், அன்பே சிவம் போன்ற படங்கள் வெளியானது.

பல வருடங்கள் கழித்து விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து ‘நானும் ஆட்டத்தில் இருக்கிறேன்’ என நிரூபித்திருக்கிறார். இந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இப்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்துக்கே இந்த நிலைமையா!.. ’கூலி’ படத்தை ஆரம்பத்திலேயே காலி பண்ண முடிவெடுத்த இளையராஜா?..

கமல்ஹாசனை களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் செய்து வைத்தது ஏவிஎம் நிறுவனம். எனவே, கமல் தனது ராஜபார்வை படம் மூலம் 100வது படத்தை கடந்த போது அவருக்கு விழா எடுக்க முடிவு செய்தது அந்நிறுவனம். அதோடு, பாலிவுட், கோலிவுட், தெலுங்கு சினிமா என எல்லாவற்றில் இருந்தும் பெரிய நடிகர்களை அழைத்து வந்த அந்த விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டது அந்நிறுவனம்.

nt ramarao

அந்த விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர் சம்மதித்துவிட்டார். அடுத்து ஆந்திரா சென்ற ஏவிஎம் சரவணன் என்.டி.ராமாராவை சந்தித்து விழாவுக்கு அழைத்தனர். சிறிது நேரம் யோசித்த என்.டி.ஆர் ‘என்னை மன்னித்துவிடுங்கள். இந்த விழாவுக்கு என்னால் வரமுடியாது. எம்.ஜி.ஆர் சினிமாவிலிருந்து விலகி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் வரலாம். ஆனால், நான் இன்னமும் சினிமாவில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன்.

நான் அந்த விழாவுக்கு வந்து கமல்ஹாசனை வாழ்த்து, பாராட்டி பேசினால் அது நான் மனப்பூர்வமாக பேசியதாக இருக்கிறது. சம்பிரதாயத்திற்கு உதட்டிலிருந்து வரும் வார்த்தைகளாகத்தான் அது அமையும்’ என சொல்லி இருக்கிறார். அவர் அப்படி சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது என வியந்து போனாராம் ஏவிஎம் சரவணன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top