Connect with us

Cinema History

அந்த ரஜினி படமெல்லாம் சுத்தமா ஓடாது… வைரமுத்து பேச்சால் கடுப்பான தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் உள்ள கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. வைரமுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவரது பாடல் வரிகளுக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருந்தது. இதனாலேயே அவரும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வந்தார்.

வைரமுத்து முதன்முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது பாடல்கள் அனைத்தும் பெரும் ஹிட் கொடுத்தன. 

கிழக்குச் சீமையிலே திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ் தானு தயாரித்தார். அந்தப் படத்தில் பாடல் வரிகளை வைரமுத்துதான் எழுதினார். நிழல்கள் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கெல்லாம் வைரமுத்துதான் பாடல் வரிகள் எழுதி வந்தார்.

கிழக்குச் சீமையிலே திரைப்படத்திற்கு பிறகு வைரமுத்துவிற்கும் தயாரிப்பாளர் எஸ் தானுவிற்கும் நல்ல நட்பு உருவானது. பல வருடங்களாக இவர்களுக்கு இடையே இந்த நட்பு நீடித்து வந்தது.

வைரமுத்து பேச்சால் வந்த பிரச்சனை:

ஆனால் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி திரைப்படத்தால் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. கபாலி திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானுதான் தயாரித்தார்.

அந்தப் படத்திற்கு அதிகமான முதலீட்டைப் போட்டிருந்ததால் படம் பெரும் வெற்றி அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார் தானு. கபாலி வெளியான அன்றே நல்லவிதமான வரவேற்புகளைதான் பெற்றது. ஆனால் அந்த சமயத்தில் ஒரு மேடையில் பேசிய வைரமுத்து கபாலி படம் படுதோல்வி அடைந்துள்ளது என பேசி இருந்தார்.

இந்த விஷயம் எஸ்.தானுவின் காதுக்கு வரும்பொழுது அவருக்கு அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் கபாலி திரைப்படம் பெரும் பெரும் ஹிட் கொடுத்தது. ஆனால் அந்த திரைப்படம் வைரமுத்துவிற்கு பிடிக்காத காரணத்தினால் அவர் இந்த மாதிரியான கருத்துக்களை பேட்டியில் பேசியிருந்தார்.

அதற்குப் பிறகு இப்போது வரை வைரமுத்துவுடன் அந்த நெருங்கிய நட்பு மீண்டும் உருவாகவே இல்லை என்று எஸ் தானுவே தனது பேட்டியில் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top