‘ஜிகர்தண்டா 2’ பற்றி கமெண்ட் அடித்த ஹாலிவுட் நடிகர்!.. நம்ம பயலுக பார்த்த வேலைய பாருங்க!...

jigar
Jigarthanda Double X : கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
அதிலும் குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மிரள வைத்தது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்று அதில் நடித்த பாபிசிம்ஹாவிற்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது. அதனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கார்த்திக் சுப்பாராஜ் விரும்பினார்.
இதையும் படிங்க: பாக்கியா ரூட் க்ளியர்.. அப்போ பிரச்னை ஆரம்பிக்கணும்ல.. மீண்டும் வெடிக்கும் ஜெனி பஞ்சாயத்து..!
நீண்ட நாள்களாகவே ப்ரடக்ஷனில் இருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து இணையவாசி ஒருவர் பிரபல ஹாலிவுட் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அதில் ‘ஹாய் கிளிண்ட். நாங்கள் இந்தியன். ஒரு இந்திய படத்தை உருவாக்கியுள்ளோம். அதன் பெயர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.அந்த முழுப்படத்தையும் உங்களுக்காக சமர்ப்பிக்கிறோம். உங்கள் இளம் வயதில் உங்களைப் போன்ற சில அனிமேஷன் காட்சிகளை இந்தப் படத்தில் நாங்கள் செய்துள்ளோம். நேரம் கிடைத்தால் அந்தப் படத்தை பாருங்கள்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆர்வத்துல போஸ்ட் பண்ணிட்டேன்! அங்க இருக்கிறவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித் குறித்து ஆரவ் சொன்ன தகவல்
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அலுவலக கணக்கிலிருந்து ‘ஹாய். கிளிண்ட் அந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார். அவருடைய ஒரு புதிய படத்தில் பிஸியாக இருப்பதால் அது முடிந்ததும் ஜிகர்தண்டா படத்தை பார்க்க இருக்கிறார்’ என்று ரிப்ளே வந்துள்ளது.
இதைப் பார்த்ததும் கார்த்திக் சுப்பாராஜ் மிகவும் சந்தோஷத்துடன் எப்பேற்பட்ட ஒரு லெஜெண்ட்? எனக்கு பேச்சே வரவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தியாவில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக இந்தப் படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
இதையும் படிங்க: பாத்ததும் மெர்சலாயிட்டோம்.. தூக்கலான அழகை காட்டி மனசை ஜில்லாக்கிய நிவிஷா!..
அந்தப் படத்தை பார்த்துவிட்டு அவருடைய மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறிய எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை அவர் காதுக்கு கொண்டு சென்ற அந்த ரசிகருக்கும் என் மனதார நன்றி என பதிவிட்டிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். அனிமேஷன் சம்பந்தப்பட்ட படங்களை எடுப்பதில் மிகவும் வல்லவர். இந்தப் படம் எடுக்கும் போதே கார்த்திக் சுப்பாராஜ் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிற்கு நன்றி என்றே சொல்லியிருப்பார். அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் லாரன்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார் கார்த்திக் சுப்பாராஜ்.