கேப்டன் என்னை பொண்ணு பாக்க வரும்போது இதுதான் நடந்தது!.. - பிரேமலதா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!...

ரசிகர்களுக்கு மட்டுமில்லை.. திரையுலகினருக்கும் மிகவும் பிடித்தமான நடிகராக இருப்பவர் விஜயகாந்த். நடிகர் என்பதை விட நல்ல மனிதராக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக, மிகவும் எளிமையானவராக அவர் இருந்ததால்தான் எல்லோருக்கும் அவரை பிடித்துப்போனது. விஜயகாந்த் பிரேமலதாவை 1990ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளையவர் சண்முக பாண்டியன். சினிமாவில் நடிகராக முயற்சி செய்து வருகிறார். அடுத்தவர் விஜய பிரபகாரன். இவர் அரசியலிலும், வியாபாரத்திலும் ஆர்வமுடையவர். இதையும் படிங்க: பாடலை கேட்டு […]

Update: 2023-08-25 02:05 GMT

ரசிகர்களுக்கு மட்டுமில்லை.. திரையுலகினருக்கும் மிகவும் பிடித்தமான நடிகராக இருப்பவர் விஜயகாந்த். நடிகர் என்பதை விட நல்ல மனிதராக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக, மிகவும் எளிமையானவராக அவர் இருந்ததால்தான் எல்லோருக்கும் அவரை பிடித்துப்போனது.

விஜயகாந்த் பிரேமலதாவை 1990ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளையவர் சண்முக பாண்டியன். சினிமாவில் நடிகராக முயற்சி செய்து வருகிறார். அடுத்தவர் விஜய பிரபகாரன். இவர் அரசியலிலும், வியாபாரத்திலும் ஆர்வமுடையவர்.

இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…

விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஊடகம் ஒன்று பிரேமலதாவை பேட்டியெடுத்தது. அதில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பிரேமலதா பகிர்ந்துகொண்டார். என்னை அவர் பெண் பார்க்க வருகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், அவர் மதுரை. நான் வேலூர். எங்கள் குடும்பத்துடன் அவருக்கு எந்த நெருக்கமும் கிடையாது.

உழவன் மகன் படம் பார்த்துவிட்டு அவரின் ரசிகையாக மாறியிருந்தேன். ஒரு நடிகர் பெண் பார்க்க வருகிறார் என்றதும் என் குடும்பத்தினர் அவரை எப்படி வரவேற்பது என யோசித்து ஆவலுடன் காத்திருந்தார்கள். அவரோ ஒரு காவி வேஷ்டி, சட்டை அணிந்து ஒரு சாமியார் போல வந்தார். அவரை பார்த்ததும் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா

எனக்கொரு தம்பி போல இருக்கிறார். இவருக்குதான் என் பெண் என முடிவெடுத்துவிட்டார். காபி குடித்துவிட்டு ‘காபி சூப்பர்’ என கேப்டன் சொன்னார். எங்களுக்கு புரிந்துவிட்டது. அவருக்கு என்னை பிடித்திருந்தது. உடனே நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கும்படி சொல்லிவிட்டார்.

அதன்பின், தொலைப்பேசியில்தான் என்னிடம் முதன் முதலாக பேசினார். அவரிடம் பேசியபோது கை, கால் எல்லாம் எனக்கு நடுங்கிவிட்டது. கட்டையான குரலில் ‘ஹலோ’ என்றார். அவர் பேசபேசத்தான் அவர் வெள்ளந்தியான மனிதர் எனக்கு தெரிந்தது. அவர் எனக்கு கணவராக கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்’ என பிரேமலதா உருகினார்.

இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

Tags:    

Similar News