தக் லைப் படத்தில் சிம்பு நடிக்கக் கூடாது!.. தயாரிப்பாளர் புகார்!.. இந்தா வந்துட்டாங்கள்ள!..

by சிவா |
simbu
X

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சையில் சிக்கும் நடிகராக இருப்பவர் சிம்பு. படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். அட்வான்ஸ் வாங்கி கொண்டு படத்தில் நடிக்க வரமாட்டார் என இவர் மீது தயாரிப்பாளர்கள் பல புகார்களை சொல்வது உண்டு. ஆனாலும், சிம்பு மாறினாரா என்றால் இல்லை. யாரோ ஒரு தயாரிப்பாளர் தொடர்ந்து இவர் மீது புகார் கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என ஒருபடத்தில் சிம்பு நடித்தார். ஆனால், வழக்கம்போல் படப்பிடிப்புக்கு சரியாக போகவில்லை. எனவே, எடுத்தவரை ஒப்பேற்றி படத்தை வெளியிட்டார் இயக்குனர். ஆனால், படம் ஊத்திகொண்டது. இதனால், தயாரிப்பாளருக்கு 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: STR 48 க்கு சோதனை ஓட்டமா தக் லைஃப்..? சிம்புவுக்கு பிக் ஓபனிங் கொடுக்க உலக நாயகன் திட்டம்

இதற்கு சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடந்து வருகிறார். அதன்பின் சிம்புவை வைத்து 3 படங்களை தொடர்ந்து தயாரிக்க ஒப்பந்தம் போட்டவர் வேல்ஸ் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்.

அப்படி சிம்பு நடித்த முதல் படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கிய இந்த படம் ஓடவில்லை. அதேபோல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமாரு’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக சிம்புவுக்கு 4.5 கோடி அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது.

ஆனால், இப்போது வரை சிம்பு அப்படத்தில் நடிக்கவில்லை. எனவே, தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பான பேச்சுவார்த்திகள் ஒரு பக்கம் நடந்து வந்தது. ஒருபக்கம், ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க துவங்கினார். இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: கமல் நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி!.. சூப்பர்ஸ்டாருக்கு ஒரு கிளாசிக் படம் மிஸ் ஆகி இருக்கும்!..

இந்நிலையில், கொரோனா குமாரு படத்தில் நடிக்காத சிம்பு மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவர் தக் லைப் படத்தில் நடிக்க அனுமதிக்க முடியாது என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.

பத்து தல படம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்த சிம்புவுக்கு இந்த விவகாரம் தலை வலியை ஏற்படுத்தி இருக்கிறது.எனவே, ஐசரி கணேஷ் விஷயத்தில் சிம்பு விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story