ஓப்பனிங் நல்லா இருந்தாலும் படம் குப்பையாதான் இருக்கும்! அஜித்துக்கு இருக்கிற ஒரே எதிரி இவர்தான் போல

by Rohini |   ( Updated:2023-09-15 00:02:58  )
ajith
X

ajith

Actor Ajith: கோலிவுட்டில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் படம் வருமா வராதா என்ற சந்தேகமே ரசிகர்களுக்கு எழுந்து விட்டது. அந்தளவுக்கு பெரும் இழுபறியை விடாமுயற்சி படம் சந்தித்து விட்டது.

படம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் வெற்றி அடுத்தடுத்து ஒரு இலக்கை அடைவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் துணிவு படம் முடிந்த கையோடு லைக்கா நிறுவனத்துடன் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்க அங்கு இருந்து ஆரம்பித்த பிரச்சினைதான் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜாவை பற்றிய மாரிமுத்துவின் சுவாரஸ்ய தகவல்…

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித், விஜய் , ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் கூறினார். அதாவது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தார் மாணிக்கம் நாராயணன்.

ஒவ்வொரு வகையில் ஒருவர் சூப்பர் ஸ்டார் என்றும் நடிப்பில் சூப்பர் ஸ்டார் கமல், ஓப்பனிங்கில் சூப்பர் ஸ்டார் அஜித் , யூத்களிடம் ஒரு சூப்பர் ஸ்டாராக விஜய் என கூறினார். அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு ஓப்பனிங் இருந்தாலும் அதன் பிறகு படம் என்னமோ குப்பையாகத்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்து ஓவர் என நிரூபித்த விஜய்!.. ஆனால், அது மட்டும் இன்னும் புகையுதே!..

ஆரம்பத்தில் இருந்தே அஜித்துக்கும் மாணிக்கம் நாராயணனுக்கும் இடையே ஒரு பெரும் பனிப்போரே இருந்து வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அஜித்தை தரக்குறைவாகத்தான் பேசி வருகிறார்.

ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரைக்கும் வரவில்லை. மேலும் ரஜினிக்கு இதற்கு முன் படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் ஜெய்லர் படத்தின் மூலம் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார். இதை தோற்கடிக்க வேண்டுமென்றால் அடுத்தடுத்து கமல், விஜய் படங்கள் வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். என்ன நடக்கும் என பொருத்திருந்து பார்ப்போம் என மாணிக்கம் நாராயணன் கூறினார்.

இதையும் படிங்க: சாரி சார் என்னால நடிக்க முடியாது!.. மணிரத்னம் – கமல் படத்திலிருந்து சிம்பு விலகியதன் பின்னணி…

Next Story