விஜய் கற்பூரம்னா, அஜீத் போராளி... அந்த தயாரிப்பாளரையே மன்னிப்பு கேட்க வச்சவரு யாரு தெரியுமா?
அஜீத், விஜய் என இரு துருவங்களையும் இணைத்து படம் தயாரித்தவர் சௌந்தரபாண்டியன். அந்தப் படம் தான் 'ராஜாவின் பார்வையிலே'. அந்தப் படத்தில் நடந்த சுவாரசியமான அனுபவங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
அந்தப் படம் ஆரம்பிக்கும்போது விஜய் நடித்த ரசிகன் படம் ஓடுது. ஜானகி சௌந்தர் ஆர்.வி.உதயகுமாரோட அசோசியேட் டைரக்டர். அவர் தான் எங்கிட்ட கதை சொல்றாரு. கதை பிடிச்சதும் எஸ்.ஏ.சந்திரசேகரைப் போய் பார்த்து சொன்னேன். உடனே அவர் இளையராஜா தான் மியூசிக் போடணும்னு கோரிக்கை வச்சார். உடனே இளையராஜாவையும் பார்த்து ஓகே வாங்கினோம். நண்பரா யாரைப் போடலாம்னு பார்த்தா அஜீத் இந்த வீட்டுலயே பல நாள்கள் கூட இருந்துருக்காரு.
விஜய் எப்படியோ அது மாதிரி அஜீத் இன்னொரு கண். அவரு வீட்டுக்கும் நான் அடிக்கடி போவேன். அது ஒரு பொற்காலம். இன்னைக்கு நினைச்சா அது ஒரு கனவா தான் தெரியுது. எம்ஜிஆர், சிவாஜி நடித்த கூண்டுக்கிளி மாதிரி அதுக்கு அடுத்தது என் படம் தான். ராஜாவின் பார்வையிலே. அஜீத், விஜய் இணைந்து நடிச்ச படம். அதுக்குப் பிறகு அவங்க சேர்ந்து நடிக்கல.
விஜய் வாய் திறக்க மாட்டாரு. அவரு கற்பூரம் மாதிரி. அஜீத் ஒரு போராளி மாதிரி. அவரோட பிரச்சனை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா அவரோட தன்னம்பிக்கை தான் அவரோட இந்தளவு வெற்றிக்குக் காரணம். ரெண்டு பேருமே கடின உழைப்பாளி.
இருவருமே வெறித்தனமா உழைச்சாங்க. அதான் இன்னைக்கு பெரிய ஸ்டாரா வந்துருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் அஜீத்துக்கும், உங்களுக்கும் மனஸ்தாபம் வந்துச்சான்னு கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார்.
இதையும் படிங்க... அந்தப் படம் இன்னொரு கில்லியா…? நம்பவே முடியாத பல தகவல்களைச் சொல்லும் நடிகர் ஸ்ரீகாந்த்..!
அஜீத்துக்கும் எனக்கும் மனஸ்தாபம் இல்ல. எனக்கு அன்னைக்கு டெக்னிக்கல் தெரியாது. எங்கிட்ட டப்பிங் பேசணும்னு சொன்னாரு. என்னை அறியாமலே டப்பிங்கை வேறொருத்தர் பேசிட்டாருன்னு சொன்னேன். அது கொஞ்சம் வருத்தம். அதுக்காக எந்த சபையிலும் தவறுகளை ஏத்துக்கறேன். நான் அறியாத வயசு. நீ கடவுள். நான் சாதாரண ஆளுன்னு அவருக்கிட்ட மன்னிப்பு கேட்குறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.