10 டிவிடி பார்த்து படம் பண்ணார் அட்லீ.. சம்பளம் வாங்கிட்டு போயிட்டார் விஜய்!.. பொங்கிய பிரபலம்!..

by சிவா |   ( Updated:2024-09-16 12:39:35  )
10 டிவிடி பார்த்து படம் பண்ணார் அட்லீ.. சம்பளம் வாங்கிட்டு போயிட்டார் விஜய்!.. பொங்கிய பிரபலம்!..
X

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 2வது திரைப்படம்தான் மெர்சல். தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரித்த இந்த திரைப்படம் 2017ம் வருடம் வெளியானது. கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை லைட்டா பட்டி டிங்கரிங் செய்து அட்லி இயக்கிய படம் இது.

அதனால்தான், விஜயும், அட்லியும் கமலை பார்க்க சென்றபோது பின்னால் அபூர்வ சகோதரர்கள் படத்தை வைத்து அவர்களுடன் போட்டோ எடுத்தார் கமல். ‘என் படத்தை சுட்டு எனக்கே காட்டுறியா?’ என கமல் அட்லியிடம் சொல்வது போல இருந்தது அது. மெர்சல் படத்தில் விஜய் 3 வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: எங்க சுத்தினாலும் வந்த இடம் சிறப்பு! ‘தளபதி 69’ டிராவல் கதை தெரியுமா?

மேலும், சமந்தா, காஜல் அகர்வா, நித்யா மேனன், வடிவேலு என பலரும் நடித்திருந்தார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் எடுத்திருந்தார் அட்லீ. எனவே, படத்தின் மேக்கிங் ரிச்சாக இருந்தது.

படம் பார்க்கவும் நன்றாகவே இருந்தது. ரஜினியின் மூன்று முகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் என சில படங்களின் கதையை போட்டு ஒன்றாக கலந்து விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருந்தார் அட்லீ. பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், இப்படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

atlee

#image_title

எனவே, அந்த தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் கால்ஷீட் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7 வருடங்கள் ஆகியும் விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. இந்நிலையில், ஒரு திரைப்பட விழாவில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெர்சல் சூப்பர் ஹிட் படமெல்லாம் இல்லை. அட்லி 10 டிவிடியை பார்த்து படம் எடுத்து சம்பளம் வாங்கிக்கொண்டு போய்விட்டார். விஜயும் சம்பளம் வாங்கிக்கொண்டு போய்விட்டார் தயாரிப்பாளருக்கு அப்படம் நஷ்டம்தான்’ என அவர் பேசியிருக்கிறார். அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Next Story