Categories: latest news

பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தா பிரச்சனை வருமா?.. ஆரம்பத்திலேயே ஏழரையை கூட்டும் பிக் பாஸ் ரச்சிதா!..

சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் என விஜய் டிவி கம்பெனி புராடக்ட்டாக இருந்து வந்த ரச்சிதா எக்ஸ்ட்ரீம் எனும் படத்தில் நடித்துள்ளார். நேற்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ரச்சிதா இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என ரொம்பவே பெருமையாக பேசினார்.

ஆனால், அவரை தொடர்ந்து அயலி வெப்சீரிஸில் நடித்த அபி நக்‌ஷத்ரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவர் பேசும் போது பெண்களுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பதால் என்ன என்ன கெட்டது நடக்கிறது என்பது தான் படத்தின் கதை என உண்மையை உளறிவிட்டார்.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

அயலி படத்தில் பெண்களுக்கு கல்வி வேண்டுமென்றும், ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் பேதம் இருக்கக் கூடாதுன்னு நடிச்ச பொண்ணையே இப்படி இந்த படத்துல மாத்திட்டாங்களே என நினைத்த பத்திரிகையாளர்கள் அங்கேயே இயக்குநரிடம் இதுபற்றிய கேள்விகளை எழுப்ப, நாங்க இந்த படத்துல எல்லா பெண்களையும் தப்பா சொல்லல, பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் அவர்களுக்கே தெரியாமல் நடக்கக் கூடிய அசம்பாவிதங்களில் இருந்து அவர்களை காக்க வேண்டிய அக்கறையுடன் இந்த படத்தை எடுத்திருக்கிறேன் என இயக்குநர் விளக்கம் கொடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரச்சிதாவிடம் கேள்வி எழுப்ப, அய்யோ அதை பத்தி மட்டும் பேசாதீங்க, அதனால் ஒரு வாய்ப்பும் கிடைக்காது என்றும் திறமை இருந்தால் தான் இங்கே சான்ஸ் கிடைக்கும் என பேசியுள்ளார். பெண்களுக்கு எதிரான படத்தில் ரச்சிதா நடிக்கிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

Saranya M

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago