Categories: latest news

இந்தி தெரியாது போயான்னு சொல்லிட்டு இந்தி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!.. யாரு படம்னு பாருங்க!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ரகு தாத்தா படத்தில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.  ரகு தாத்தா டீசரில் இந்தி தெரியாது போயா என்றும் இந்தி தெரிந்தால் தான் இந்த புரமோஷன் வேண்டுமென்றால் அப்படியொரு புரமோஷனே வேண்டாம் என அவர் சொன்னதும் இங்கே உள்ள தமிழர்கள் எல்லாம் கீர்த்தி சுரேஷுக்கு ஃபயர் விட்டனர்.  ஆனால், தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தின் பூஜையில் நமஸ்கார்.. பஹூத் அச்சா என சொல்லிக் கொண்டு வரவேற்பு நடத்தியுள்ளதை பார்த்து பாதி பேர் டென்ஷன் ஆகி விட்டனர்.

சினிமாக்காரர்களை எதற்கும் அப்படியே நம்பக் கூடாது என்பதை கீர்த்தி சுரேஷ் நிரூபித்து விட்டாரே என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிக்க உடல் எடையை எல்லாம் குறைத்தார். ஆனால், கடைசியில் பார்க்கவே சகிக்கல என அவருக்கு பாலிவுட் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையும் படிங்க: பேராசையால எல்லாம் போச்சி!.. அயலானோட எல்லாம் ஓவர்!. நிம்மதி பெருமூச்சி விட்ட எஸ்.கே!..

நயன்தாராவை இந்தியில் அறிமுகப்படுத்திய அட்லீ தற்போது கீர்த்தி சுரேஷையும் இந்தியில் தனது தயாரிப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

வருண் தவான் ஹீரோவாக நடிக்க உருவாக உள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்தை பாலிவுட்டில் அட்லீ தயாரித்து வரும் நிலையில், அந்த படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு பூஜை போகி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் மாஸ் காட்டும் தங்கதுரை! செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா

அதன் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரகு தாத்தா படம் வருவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷின் இந்தி படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அந்த படத்தில் அவர் என்ன தான் இந்தியை எதிர்த்தாலும் ரசிகர்கள் பொங்க மாட்டார்கள் சிரித்து விடுவார்கள் என்கின்றனர்.

 

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago