அப்பா இருந்தபோது இருந்த ரஜினி கமல் வேற!.. இப்ப வேற!.. மனம் திறக்கும் பாலச்சந்தர் மகள்…

Published on: December 17, 2023
---Advertisement---

Pushpa Kandasamy: தமிழ்சினிமாவின் இயக்குனர்கள் பட்டியலை தொடங்கினாலே முதல் பெயர் பாலசந்தரின் பெயராக தான் இருக்கும். அத்தனை பேரும் புகழும் உடையவர். அவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்தார்.  ரஜினி, கமல் எனும் இரண்டு முக்கிய நடிகர்களை உருவாக்கியவர் இவர். அவரை பற்றி அவரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி நிறைய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

நான் தயாரிப்பாளரான முதல் படம் புன்னகை மன்னன். அந்த படத்தில் தான் என் பெயர் வந்தது. கேரளாவில் மழைக்காலத்தில் எடுத்த படம் என்பதால் நான் அதிகமாக ஷூட்டிங் பக்கம் போக முடியவில்லை. படக்குழு ரொம்ப சிரமப்பட்டது. நினைத்தாலே இனிக்கும் படம் தொடங்கும் போது கமல் ஏற்கனவே வளர்ந்து நின்றார்.

இதையும் படிங்க: எனக்கு பேரு வச்சவங்க இத செய்யாமலா இருப்பீங்க! மாயாவை பொழந்து கட்டிய கமல் – என்ன பேரு தெரியுமா?

ரஜினிக்கு அது இரண்டாவது படம் என நினைக்கிறேன். அப்போது பெரிய விஷயமாக இருந்தது வெளிநாட்டில் படம் எடுப்பது தான். இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில் மியூசிக்கிற்கு முக்கியம் கொடுத்திருப்பார் அப்பா. ஒரு பாட்டில் பிரபலமே இல்லாமல் பறவைகள் மட்டும் இருக்கும்.

முடிந்தவரை இருவருக்கும் ஒரே அளவு காட்சிகள் இருக்கும். ஆனால் கே.பி பாலசந்தரின் ரசிகையான எனக்கு அந்த கதை பத்தவில்லையோ என அப்போது தோணியது. ஆனால் இப்போ நிறைய காட்சிகள் புரிந்தது. இருந்தும் அந்த படத்துக்கு பின்னர் இனிமே சேர்ந்து நடிக்க கூடாது என ரஜினி மற்றும் கமல் முடிவு எடுத்தது கவலையாக இருந்தது.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா! அப்படி என்னத்தான் இவங்களுக்கு பிரச்னை தெரியுமா..?

இதுமட்டுமல்லாமல் அப்பா இருக்கும் போது மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு எல்லையிலே இருந்தனர். ஆனால் இப்போ அவர்களிடம் நெருங்குவது ரொம்பவே எளிதாகிவிட்டது. எப்போ வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு எங்க நிறுவனத்தை வைத்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட சகோதர பாசத்தில் அவர்கள் இருப்பதாகவே தோன்றுவதாக புஷ்பா கந்தசாமி தெரிவித்து இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.