More
Categories: Cinema News latest news

உனக்கும் எனக்கும் தான் பிரச்சினை! மகளுக்காக சரணடைந்தாரா ரஜினி.. பின்னணியில் நடந்த சம்பவம்

Actor Rajini: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை மிகப்பெரிய வெற்றியோடு இன்றுவரை தொடர்ந்து வருகிறார். பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினியின் படங்களே முதலிடத்தை பிடித்து வருகின்றன.

இன்றைய தலைமுறை நடிகர்களான அஜித், விஜய்க்கே டஃப் கொடுக்கும் நடிகராக இன்றளவும் திகழ்ந்து வருகிறார் ரஜினி. அதிலும் விஜய் , ரஜினி ரசிகர்களின் பிரச்சினைக்கு நீண்ட நாளுக்கு பிறகு நேற்றுதான் ரஜினி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்…

ஜெயிலர் பட ரிலீஸுக்கு முன்பே ஆரம்பமான அந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினை ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. காக்கா கழுகு கதையெல்லாம் சொல்லி ரஜினி, விஜய் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று நடந்த லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் அத்தனை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. என் கண் முன்னே வளர்ந்த பையன் விஜய். அவரை எனக்கு போட்டியாக நான் எப்படி நினைப்பேன். ரசிகர்கள் இப்படி சொல்வது எனக்கு வருத்தமளிக்கிறது. இனிமேல் ரசிகர்கள் இதை வைத்து சண்டை போட வேண்டாம் என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…

இதை குறித்து கோடம்பாக்கத்தில் என்ன பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்றால் இத்தனை நாள் இல்லாமல் ஏன் ரஜினி நேற்று அதுவும் லால்சலாம் பட விழாவில் இதை பற்றி பேசினார் என்றால் விஜய் ரசிகர்களால் தன் மகளின் படம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இதற்கிடையில் ரம்பா பிரச்சினை வேற சூடுபிடித்தது.

அதில் ஒரு சாரார் குண்டர் சட்டத்தில் தூக்கி போடுங்கள் ரஜினியை என்றெல்லாம் இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இது எல்லாம் சேர்ந்து தன் மகளின் கனவை பாழாக்கி விடக் கூடாது என்பதற்காகவே மிகவும் இறங்கி வந்து நேற்று பேசியிருக்கிறார் ரஜினி என கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க : நீங்க பண்றது கிரிஞ்சுனு புரியுதா? ஜவ்வா இழுக்குறீங்களே… பாக்கியலட்சுமிக்கு வந்த சோதனை

Published by
Rohini

Recent Posts