Cinema History
வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..
இப்போதுதான் ஒரு திரைப்படத்தை 6 மாதங்கள் வரை எடுக்கிறார்கள். அதுவும் பெரிய இயக்குனர்கள் ஒரு வருடங்களுக்கும் மேல் ஒரு படத்தை எடுக்கிறார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர்தான் இப்போதெல்லாம் பெரிய இயக்குனர்களாகவே பார்க்கப்படுகிறார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பது, கதையை சரியாக எழுதி முடிக்காமலயே படப்பிடிப்பை துவங்குவது, ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் திடீரென வேறுபடத்திற்கு நடிக்க சென்றுவிடுவது என இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர் அவர் இயக்கும் படங்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் படப்பிடிப்பை நடத்துகிறார்.
இதையும் படிங்க: ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..
அதேபோல்தான் வெற்றிமாறன். விடுதலை படத்தை 2 வருடங்கள் எடுத்தார். இப்போது விடுதலை 2 படத்தை ஒன்றரை வருடங்களாக எடுத்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களின் படப்பிடிப்பும் ஒரு வருடத்திற்கும் மேல் நடந்து வருகிறது. அதிக காட்சிகளை எடுத்துவிட்டதால் இந்தியன் 3 படமும் தயாராகி வருகிறது. ஷங்கரின் சிஷ்யர் அட்லியும் இதைத்தான் செய்து வருகிறார்.
அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் அதன் செலவு தயாரிப்பாளர் தலையில்தான் விடியும். ஆனால், அதை பற்றி இயக்குனர்கள் கவலைப்படுவதில்லை. தன்னை பெரிய இயக்குனர்களாகவே காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், 80,90களில் இப்படியெல்லாம் இல்லை. 3 மாதங்களில் ஒரு படத்தை முடித்துவிடுவார்கள். சில படங்கள் ஒரு மாதத்தில் கூட உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…
சரி விஷயத்திற்கு வருவோம். ரஜினிக்கு முரட்டுக்காளை போல ஜனரஞ்சகமான கதைகளை எழுது ரசிகர்களிடம் அவர் பிரபலமாக காரணமாக இருந்தவர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம். ரஜினி பிஸியாக நடித்து கொண்டிருந்தபோது அவருக்கு உதவ நினைத்த ரஜினி இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை அழைத்து ‘15 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுக்கிறேன். வேறு ஹீரோ நடிக்கட்டும். நான் கௌவர வேடத்தில் நடித்து கொடுக்கிறேன்’ என கூறியுள்ளார்.
ஆனால், ‘கௌரவ வேடத்தில் நீங்கள் நடிப்பது அவருக்கு பெரிய உதவியாக இருக்காது. 10 நாட்கள் சேர்த்து 25 நாட்கள் கால்ஷீட் கொடுங்கள். நான் ஒரு படத்தை எடுக்கிறேன்’ என முத்துராமன் சொல்ல ரஜினியும் சம்மதித்தார். பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி, தயாரித்து உருவான அந்த படம்தான் குரு சிஷ்யன். ரஜினியுடன் பிரபுவும் நடித்திருப்பார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து பஞ்சு அருணாச்சலத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: பல தடவ ட்ரை பண்ணியும் நடிக்க முடியாம போச்சே!. ரஜினியையே டீலில் விட்ட அந்த நடிகை…