Connect with us
rajini

Cinema History

ஒரே வருடத்தில் 20 படங்கள்!.. பறந்து பறந்து நடித்த ரஜினிகாந்த்!.. எல்லாமே சூப்பர் ஹிட்டு!..

Rajinikanth: தமிழ் சினிமாவில் இன்றும் தனக்கென நீங்காத ஒரு இடத்தில் இருந்து வருபவர் ரஜினிகாந்த். கே.பாலசந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். தனது கடின உழைப்பால் சூப்பர்ஸ்டாராக இன்றும் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளிவரவிருக்கிறது.

வில்லனாக தனது திரைப்பயணத்தை துவங்கிய ரஜினி நடிப்பில் வெளிவந்த “மாங்குடி மைனர்” படமே அவரது முதல் ஆகஷன் படமாக அமைந்தது. “பைரவி” படத்தின் மூலம் ஹீரோ வாய்ப்பை பெற்ற ரஜினி “முள்ளும் மலரும்” படத்தின் மூலம் தனது நடிப்பின் திறமையை ரசிகர்களிடையே உறுதி செய்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அவரால் திறம் பட நடிக்க முடியும் என்பதனை உறுதி செய்தது இப்படம்.

இதையும் படிங்க: ரஜினியை வைத்து 20/20 ஆடிய இயக்குனர்… கப் அடிச்சு கொடுத்த பிகிலும் இவருதானாம்!….

இப்போதெல்லாம் அவரின் புதிய படங்ளை ஆண்டிற்கு ஒருமுறை பார்த்தாலே அது அரிது. ஆனால் 1978ம் ஆண்டில் அவர் பறவைகளுக்கு போட்டியாக, படப்பிடிப்பிற்காக வானில் விமானத்தில் பறந்த வண்ணம் இருந்திருக்கிறார். இந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் அவர் 20க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

“சங்கர் சலீம் சைமன்”, “கழுகு”, “ப்ரியா”, “அவள் அப்படித்தான்”, “முள்ளும் மலரும்” உள்ளிட்ட தமிழ் படங்களில் மட்டுமல்லாது கன்னடம். தெலுங்கு, மலையாளம் என இதர மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். இதில் “மாங்குடி மைனர்” படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் காலையில் நடைபெற விமானத்தில் சென்று பங்கேற்று முடித்துவிட்டு, மாலையில் அப்போதைய “மெட்ராஸ்”க்கு மீண்டும் விமானம் மூலம் வந்திறங்கி “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் நடிப்பாராம்.

மேலும் அந்த படங்களில் பெரும்பான்மையானவை வெள்ளிவிழா கண்ட படங்கள் என்ற சாதனையயும் பெற்றது. இவருடைய சுறுசுறுப்பும், அவர் தனது தொழில் மீது கொண்டிருந்த பக்தியும் பலரையும் வியப்படைய செய்தது. சமகால போட்டியாளராக பார்க்கப்பட்ட கமலஹாசன், ரஜினிக்கும் இடையயே பலத்த போட்டி நிலவிவந்த நேரம் அது.

இதையும் படிங்க: தம்பி கண்டிப்பா ஜெயிக்கணும்!.. விஜயின் அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி!.. இது செம டிவிஸ்ட்!..

இருவரது ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு இவர்கள் மீது அன்பு காட்ட, பல நேரங்களில் சலசலப்பு, சண்டைகள் வரை சென்றுள்ளது. திரையில் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட போதும் இன்றுவரை இருவரும் மிகச்சிறந்த நன்பர்களாகவே இருந்து வருகின்றார்கள். தாங்கள் சந்தித்துக்கொள்ளும் மேடைகளில் தங்களது நட்பு, ஒற்றுமையை வெளிப்படுத்தி வந்த வண்ணமே இருந்து வருகின்றார்கள்.

தனது வயதையும் கூட பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களின் விருப்பத்திற்காகவும், அவர்களது சந்தோஷத்திற்காகவும் இன்றளவும் சிரமங்களை சமாளித்து வலம் வரும் ரஜினிகாந்த் அவரது “வேட்டையன்” படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top