குருநாதர் பாலசந்தரை ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் சந்தித்த முதல் தருணம்… அடடே!
Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். அவர் முதன்முதலில் ரஜினியை எப்படி சந்தித்தார்? இருவருக்கும் முதல் பேச்சு எப்படி இருந்தது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அப்போதில் இருந்தே அவருக்கு கே.பாலசந்தரை ரொம்ப பிடிக்குமாம். அவரின் அவள் ஒரு தொடர்கதை படத்தினை தொடர்ந்து நான்கு முறை பார்த்து இருக்கிறார். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை. அந்த சமயத்தில் ரஜினியின் படிப்பும் முடிய இருந்ததாம்.
இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..
அப்போது மாணவர்களை சந்திக்க கே.பாலசந்தர் வருவதாக தகவல் வந்தது. இதை கேட்ட ரஜினிக்கு ஒரே சந்தோஷமாம். குறிப்பிட்ட நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, பாலசந்தர் 20 நிமிடம் தான் இருப்பார். அவரிடம் நல்ல கேள்விகளை மட்டுமே கேளுங்கள் எனக் கூறி செல்கிறார்.
நேரம் வந்ததும், கே.பாலசந்தர் வந்தமர்ந்தார். ரஜினிகாந்த் அவரை பார்த்து பிரமித்து போய் அப்படியே உட்கார்ந்து இருக்கிறார். எல்லாரும் பெயர்களை கூறிக்கொண்டே வரும் போது ரஜினி முறை வந்தது கூட அவருக்கு தெரியவே இல்லையாம். மற்றவர்கள் உசுப்பி விட்டதும் எழுந்து சிவாஜி ராவ் என்றாராம்.
எல்லாரும் கேள்வி கேட்ட நிலையில், நானும் கேட்கிறேன் என ரஜினி எழுந்து நிற்கிறார். நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை வேகமாக ஆங்கிலத்தில் கேட்டாராம். பாலசந்தரே புரியாமல் திகைத்து நிற்க மீண்டும் பொறுமையாக அதே கேள்வியை கேட்டாராம்.
இதையும் படிங்க: பட வாய்ப்புகள் போச்சு!.. அதிரடியா மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த கோமாளிகள்.. அட அவருமா?..
பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது" என்றாராம். பின்னர் மீண்டும் ரஜினியிடம் பேரை கேட்டாராம். சிவாஜி ராவ் என்கிறார். உங்களுக்கு தமிழ் தெரியாதா? எனக் கேட்க கொஞ்சம் தான் எனக் கூறுகிறார் ரஜினி. உங்கள் பேச்சிலே தெரியுது எனக் கைகுலுக்கி விட்டு கிளம்புகிறார்.
அப்போது ரஜினிகாந்தின் கல்லூரி முதல்வர் ரஜினியிடம் வந்து கே.பாலசந்தருக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கிறது எனக் கூறினாராம். அந்த சந்தோஷத்தில் ரஜினி திரும்பி பார்க்க எம்.எஸ்.எல் 363 என்ற எண் கொண்ட காரில் கே.பாலசந்தர் ஏறிச்சென்று விட்டாராம். அங்கு தொடங்கியது இருவரும் பந்தம்.