குடித்து விட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்!.. அவருக்கு நான் மூன்றாம் மனைவி... ரகசியத்தினை உடைத்த ராஜ்கிரண் மகள்
Rajkiran: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அவர்களும் ராஜ்கிரண் மீது பல புகாரை சொல்லி பேட்டி கொடுத்து இருந்தனர்.
முனீஸ் ராஜா என் மனைவிக்கு சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும் பேசி இருப்பார். ஆனால் இவர்கள் திருமணம் வருடங்கள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய பிரியா என் கணவரினை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எங்க திருமணம் சட்டப்படி நடக்கவில்லை.
என் கஷ்ட காலத்தில் என் அப்பா துணை நின்றார். அவருக்கு நன்றி எனவும் பேசி இருப்பார். இதனை தொடர்ந்து முனீஸ்ராஜா மனைவியை, ராஜ்கிரண் தான் பேச வைக்கிறார். என்ன நடக்கிறது என்பது குறித்த ஆதாரங்களுடன் வருவேன் எனப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் மனைவி ஜீனத் பிரியா தற்போது பேட்டி கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ராஜீயை ஏமாற்றி ஓடிய கண்ணன்!… காப்பாற்றிய பாக்கியா… ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்டீங்க போல
அந்த பேட்டியில் இருந்து, என் கல்யாணத்தில் நிறைய மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால் தான் மணமுறிவை அதிகாரப்பூர்வமாக சொல்ல நினைத்து வீடியோ போட்டேன். முதலில் என் கணவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் எனக்கு நல்லது செய்ததாகவே யோசித்து என் அப்பாவுக்கு எதிராக பேசினேன்.
எங்க கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் எங்களுக்குள் பிரச்னை தொடங்கிவிட்டது. சரி செய்ய நினைத்தேன். குடிச்சிட்டு என்னை அடித்து கொடுமைப்படுத்துவார். காலையில் எதுவும் அவருக்கு நியாபகம் இருக்காது. காசை வாங்கிட்டு வரச்சொல்லுவார். இருந்தும் அவருக்காக சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என அவர் கேட்டதை எல்லாம் செய்ய தோன்றியது.
அதற்குரிய ஆதாரங்களை நான் வைத்து இருக்கேன். நான் லைஃபை காப்பாத்திக்கணும் என்பதற்காக நிறைய அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நிறைய மிரட்டல்கள் தந்தார். என் அம்மாவை கேவலப்படுத்துவேன். எனக்கு ஆதரவாக இருந்த என்டிஆர் மனைவியை அசிங்கப்படுத்துவேன் என பயமுறுத்தியே என்னை வைத்து இருந்தார். அவர்களுக்காக இருந்த நான், கடைசியில் என் வாழ்க்கையை காப்பாத்திக்க வெளியில் வரும் நிலை ஆகிவிட்டது.
இதையும் படிங்க: சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!
இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள தொடங்கினேன். அதுமட்டுமல்லாமல் என் குடும்பத்தினரையே வெட்டுவேன் என்றும் மிரட்டினார். என் உரிமையை கேட்டு வாங்கு எனத் தொல்லை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சட்டப்படி முறையாக கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் நான் லீகல் மனைவி இல்லை என்ற உண்மையை சொல்லி ஷாக் கொடுத்தார்.
அந்த இரண்டாம் மனைவிக்கு முன்னர் முதலில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண்ணை லீகலாக திருமணம் செய்யாததால் பாதியிலே அனுப்பி விட்டுவிட்டார். நான் மூன்றாம் மனைவியாக தான் இருக்கேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்
இதையும் படிங்க: சொல் பேச்சு கேட்ட சிவகார்த்திகேயன்!… தன் புரோமோஷனுக்காக அவரை பயன்படுத்தி கொண்ட அஜித்… பொறாமையின் உச்சம்