எல்லாரும் ரிஜக்ட் பண்ணாங்க.. தனுஷ் நம்புனாரு! அமரனுக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துச்சா?

amaran 1
தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன .நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவர் தனது சிறந்த படைப்புகளை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்துக் கொண்டு வருகிறார் .அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன்.
அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். அந்த படம் கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. தற்போது தெலுங்கில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இப்படி அடுத்தடுத்து பிசியாக இருக்கும் தனுஷை பற்றி வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது வாத்தி படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் தனுஷ் நடிப்பதற்கு முன்பாக தெலுங்கில் பல நடிகர்களிடம் படத்தின் கதையை சொல்லி வாய்ப்பு கேட்டாராம் வெங்கி அட்லூரி .ஆனால் படம் ஒரு ஹேப்பியான படமாக இல்லை எனக்கு கூறி தெலுங்கில் பல நடிகர்கள் அந்த கதையை ரிஜெக்ட் செய்து விட்டார்களாம்.
அதன் பிறகு தான் வெங்கி அட்லூரி தமிழில் ஏதாவது நடிகரை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என தனுஷிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். கதையைக் கேட்டதும் தனுஷ் கைதட்டியதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்தாராம் .எப்போ டேட் வேணும் என கேட்டு தன்னுடைய கால்ஷீட்டையும் கொடுத்தாராம் தனுஷ்.
இதையும் படிங்க: சத்தமே இல்லாம பூஜைய முடிச்சுட்டீங்க போலயே?… வேற லெவல் லுக்கில் எஸ்.கே-சுதா கொங்கரா..!
இப்படி என்னுடைய 12 வருட சினிமா வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என பெருமையாக கூறினார் வெங்கி அட்லூரி. தெலுங்கு நடிகர்களை பொருத்தவரைக்கும் பட மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். படத்தை பார்த்து வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள் .ஆனால் தனுஷ் என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் என வெங்கி அட்லூரி கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் தனுஷுடனான அவருடைய அனுபவத்தையும் பகிர்ந்தார். இப்போது ராஜ்குமார் பெரியசாமியுடன் தான் தனுஷ் அடுத்ததாக ஒரு படத்தில் இணைய இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும் .ஆனால் இது அமரன் திரைப்பட வெற்றிக்கு பிறகு தான் நடந்தது என்பது பொய். அமரன் படம் ரிலீஸ் ஆவதற்கு 11 மாதங்களுக்கு முன்பே ராஜ்குமார் பெரியசாமியை தனுஷ் அழைத்து நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறினாராம்.
ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ரங்கூன் படத்தை பார்த்திருக்கிறார் தனுஷ். அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். அதன் பிறகு தான் ராஜ்குமாரை அழைத்து சேர்ந்து படம் பண்ணலாம் என கூறி இருக்கிறார். ஆனால் அவருக்கு அமரன் திரைப்படம் இந்தளவு சக்சஸ் ஆகும் என நினைக்கவில்லை.
இதையும் படிங்க: சரியான கல்நெஞ்சக்காரரா இருப்பாரோ?.. கர்ணன் படத்தில் நட்டியை வச்சு செஞ்ச மாரி செல்வராஜ்!..
அதற்கு முன்பாகவே நானும் அவரும் பேசி அவருடைய 52 வது படத்தை பண்ணலாம் என்ற முடிவை எடுத்திருந்தோம். அப்போதே நான் அவரிடம் கதையை சொல்லி விட்டேன். அந்த கதையுடன் அவர் தன்னை இணைத்தும் கொண்டார். இதிலிருந்து அவர் அனைவரிடமும் எவ்வாறு பழகுகிறார் எந்த அளவு நட்பாக இருக்கிறார் என தெரிகிறது என்று ராஜ்குமார் பெரியசாமி அந்த பேட்டியில் கூறினார்.