Cinema History
நோ.. நெவர்!.. செத்தாலும் அது மட்டும் நடக்கக் கூடாது!.. கறாராக இருந்து சாதித்து காட்டிய ரஜினி!..
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கோலோச்சினாலும் ரஜினிகாந்துக்கு தமிழ் தாய் மொழி கிடையாது. அவரின் தாய் மொழி மராத்தி. பெங்களூரில் வசித்ததால் கன்னடம் தெரியும். நடிப்பது என முடிவானதும் அவர் தேர்ந்தெடுத்தது தமிழ் சினிமாவைத்தான். சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தார்.
பாலச்சந்தர் மூலம் சினிமாவில் நுழைந்தார். பாலச்சந்தர் இவருக்கு போட்ட முதல் கண்டிஷனே ‘தமிழை நன்றாக கற்றுக்கொள். உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் உன்னை தொடர்ந்து பயன்படுத்துவேன்’ என்பதுதான். துவக்கத்தில் தமிழ் மொழியை உச்சரிக்க படாதபாடு பட்டார் ரஜினி.
இதையும் படிங்க: ரஜினியை வச்சி படம் எடுக்குறியா?!. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
பாலச்சந்தர் எடுத்த சில தெலுங்கு படத்தில் நடித்த போது தெலுங்கு பேச வேண்டி இருந்தது. ஒருகட்டத்தில் வெறுப்பாகி சினிமாவை விட்டே போய்விடலாம் என்று கூட நினைத்தார். ஆனால், அவரை சினிமா விடவில்லை. பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
இப்போதும் அவரின் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழை சரியாக பேச பழகி 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். சினிமா விழாக்களில் அழகாக பேசுகிறார். இது எல்லாம் சாத்தியமாவதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது. ரஜினியுடன் பல படங்களில் நடித்தவரும், அவரின் உறவினருமான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஊடகம் ஒன்றில் இதுபற்றி பேசியதாவது:
இதையும் படிங்க: ஜெயிலர் படத்துக்கு பதில் இந்த கதையில் தான் ரஜினி நடிச்சிருக்கணும்… தப்பிச்சிட்டாருனு சொல்லுங்க…
துவக்கத்தில் ரஜினிக்கு தமிழ் பேச வராது. எனவே, அவரின் 2வது படத்திலேயே அவரின் குரலுக்கு வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்க முயற்சி நடந்தது. ஆனால், செத்தாலும் அது நடக்கவே கூடாது என ரஜினி பிடிவாதமாக இருந்தார். எனக்கு நான்தான் பேச வேண்டும். வேறு ஒருவர் எனக்கு பேசி அதில் கிடைக்கும் புகழ் எனக்கு வேண்டாம். நான் பேசி ரசிகர்களை ரசிக்க வைக்கிறேன் என்பதில் தெளிவாக இருந்தார்.
ஆன்மிகம், தத்துவம் என நிறைய புத்தகங்களை படித்தார். இப்போது அவர் மேடை ஏறினாலே அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும் படி வளர்ந்து நிற்கிறார். இது அவரின் வெற்றி. அவர் அப்படி முடிவெடுக்கவில்லை எனில் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்க முடியாது’ என ஒய்.ஜி.மகேந்திரன் பேசினார்.