Connect with us
leo

Cinema News

லியோ படம் ஏன் ரசிகர்களை ஏமாற்றியது?!. படக்குழு செய்த தவறுகள் என்னென்ன?!.. வாங்க பேசுவோம்!..

Leo Movie: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான லியோ படம் யாரும் எதிபார்க்காதபடி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்த அளவுக்கு எந்த படமும் விமர்சனத்தை பெறவில்லை. லியோ படத்தை பொறுத்தவரை துவக்கம் முதலே என்னென்ன தவறுகள் நடந்தது என்பது பற்றித்தான் பார்க்க போகிறோம்.

1 – முதலில் படத்தின் நீளம். 2.45 மணி நேரமே ரசிகர்களை சோதித்தது. என்னதான் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றாலும் இரண்டாம் பாதியில் அது திகட்டி போனது. படக்குழு படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

2 – இப்படத்தில் நடித்த நடிகர்கள் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பே இப்படத்திற்கு எமனாக மாறியது. சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற முக்கிய வில்லன்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அதுவே, ரசிகர்களை ஏமாற்றியது.

3 – இந்த படத்தில் தனுஷ், சிம்பு, ராம் சரண், சூர்யா, கார்த்தி, விக்ரம், கமல்ஹாசன் என பலரும் எல்.சி.யூ-வாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் படக்குழு அதை மறுக்காமல் அந்த சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் செய்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், படத்தில் ஜார்ஜை தவிர எல்.சி.யூ என எதுவுமே இல்லை என்றதும் ஏமாற்றமானது.

4 – இந்த படத்திற்கு சரியான புரமோஷன் செய்யப்படவில்லை. ஆடியோ லான்ச் ரத்தானதும் செய்தியாளர்கள், சந்திப்பு, ரசிகர்கள் சந்திப்பு என அப்படத்தில் நடித்த நடிகர்களை வைத்து ஊடகங்களில் பேச வைத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பதால் ரசிகர்கள் சொந்த கற்பனையில் படம் இப்படி இருக்கும்.. அப்படி இருக்கும் என கற்பனை செய்து கொண்டனர்.

5 – விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் மோதல் ஏற்பட்டு லோகேஷ் போய்விட்டார். இரண்டாம் பாதியை ரத்தினகுமார்தான் இயக்கினார் என சமூகவலைத்தளங்களில் அள்ளிவிட்டனர் ஆனால், இதற்கு படக்குழு மறுப்பு தெரிவிக்கவே இல்லை. ஊடகங்களில் பேட்டி கொடுத்தபோதும் லோகேஷ் இதுபற்றி பேசி, மறுக்கவே இல்லை. இதுவும் படத்திற்கு எதிராக திரும்பியது.

leo

6 – படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது என இப்படத்தை தயாரித்த லலித்குமார் பேட்டி கொடுத்தார். அப்படியெனில் இரண்டாம் பாதி நன்றாக இல்லையா? என பலரும் நினைத்தனர். மேலும், படம் வெளியான பின் லலித்குமார் ‘தெரிஞ்சிதான் சொல்லியிருக்கார்’ என அவரின் வீடியோவை பலரும் பகிர்ந்து ட்ரோல் செய்தனர்.

7 – இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சென்னை ரோகிணி தியேட்டரில் வெளியிட்டபோது விஜய் ரசிகர்கள் மொத்த இருக்கைகளையும் சேதம் செய்தனர். இந்த செய்தி எல்லோருக்கும் போய் சேர்ந்தது. எனவே, முதல் 2 நாட்கள் Family audience என சொல்லப்படும் குடும்பத்துடன் யாரும் படத்தை பார்க்க போகவில்லை. விஜய் ரசிகர்களால் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என்கிற பயம் பலருக்கும் ஏற்பட்டது.

8- படத்தை ரிலீஸ் செய்வதில் Revenue Share என சொல்லப்படுவதில் தயாரிப்பாளர் அதிக சதவீதத்தை கேட்டதால் சில தியேட்டர் அதிபர்கள் கோபமடைந்து ‘இங்கே லியோ படம் ரிலீஸ் இல்லை’ என போர்டே வைத்துவிட்டனர். அதன்பின் பேச்சுவார்த்தை நடைபெற்று அங்கு படம் வெளியானது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்தும் எந்த தியேட்டரும் 5 காட்சிகளை போடவில்லை. இதனால், வசூல் பாதிக்கப்பட்டது.

9 – படம் வெளியாகி முதல் நாள் மட்டும் ரூ.145 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதன்பின் அமைதியாகிவிட்டனர். இப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டாலும் அதில் உண்மை இருக்கிறதா என்பது சந்தேகம்தான். வசூல் பற்றி தினமும் ஒரு அப்டேட் கொடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

leo

10 – லியோ படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏன் தளபதி 68 பூஜை வீடியோவை வெளியிட வேண்டும்?. நெகட்டிவ் விமர்சனங்களை திசை திருப்புவதை விட லியோ படத்தின் பாசிட்டிவ் விஷயங்களை ரசிகர்களிடம் சொல்லியிருக்கலாம். அதில் நடித்த ரசிகர்களை வைத்து பேட்டி கொடுக்க வைத்திருக்கலாம். அதை செய்யாமல் அதை திசை திருப்ப நினைத்ததும் படத்திற்கு எதிராக திரும்பிவிட்டது.

11. விஜயின் கதாபாத்திரமே குழப்பமாக இருந்தது. உண்மையிலேயே அவர் லியோவா?.. இல்லை பார்த்திபன்தானா?. அவர் தன்னை என்னவாக நினைக்கிறார்?.. லியோ என்றால் ஏன் நடிக்கிறார்?.. ஏன் தன்னைத்தானே அவர் கெட்டவார்த்தையில் திட்டிக்கொள்கிறார் என்கிற எந்த கேள்விக்கும் படத்தில் பதில் இல்லை.

12. ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் என்றாலும் படத்தின் முழு கதை மற்றும் திரைக்கதையை கேட்காமல் விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் பெரிய தவறுதான்.

இந்த காரனங்களால்தான் லியோ படம் ரசிகர்களை ஏமாற்றியது என தைரியமாக சொல்லலாம்!..

இதையும் படிங்க: அடிதூள்!.. நல்ல நாள் அதுவுமா அடுத்த பிசினஸை ஆரம்பிச்சிட்டாரே நயன்தாரா!.. என்ன தொழில்னு பாருங்க!..

google news
Continue Reading

More in Cinema News

To Top