யுவன மட்டும் நம்பினா நடுத்தெருவுல நிக்கணும்... விஜய் எடுத்த முடிவுக்கு காரணம் இதுதானாம்!..

by சிவா |
yuvan shankar
X

லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட்பிரபுவுடன் விஜய் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது விஜயின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் அப்பா விஜய்க்கு ஜோதிகாவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், இரட்டை வேடம் தத்ரூபமாக வருவதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர். இதற்காக விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!

இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் தமனும் இசையமைக்கவுள்ளார் என படக்குழு கூறியுள்ளது.

அதாவது, யுவன் சங்கர் ராஜாவுக்கு தமன் உதவுவார் என படக்குக்ழு தெரிவித்துள்ளது. தமன் பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் இசையமைப்பாளராக மாறி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் சில படங்கள்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஷங்கர் ஸ்கேனிங் செய்த இடத்தில் விஜய்!.. இந்தியன் 2 ரேஞ்சுக்கு சென்ற தளபதி 68!..

விஜயின் வாரிசு படத்திற்கும் தமன் இசையமைத்திருந்தார். ஏற்கனவே யுவன் இருக்கும்போது எதற்கு தமன் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. பொதுவாக யுவன் சங்கர் ராஜா அவரின் அப்பா போலவோ, அனிருத் போலவோ வேகமாக வேலை செய்யும் இசையமைப்பாளர் கிடையாது. அவரிடம் டியூன் வாங்குவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும், பின்னணி இசைக்கும் படுத்தி எடுத்துவிடுவார்.

அதனால்தான் திறமையான இசையமைப்பாளராக இருந்தும் அவரை பெரிய இயக்குனர்கள் பயன்படுத்துவது இல்லை. தளபதி 68 படத்திலும் அவரால் பாடலோ இல்லை பின்னணி இசையோ தாமதமாக கூடாது என்பதால்தான் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்!.. அப்பாவுடன் மகன் சஞ்சய் பேசமாட்டார்!.. பிரபலம் சொன்ன பகீர்!..

Next Story