தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். ரஜினிக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டவரும், அதிக வசூலை கொடுக்கும் நடிகராக விஜய் மாறினார். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் ரஜினியை விடவும் அதிக வசூலை கொடுக்கும் நடிகராக மாறினார் விஜய்.
அதனால்தான் விஜய்தான் இப்போது சூப்பர்ஸ்டார் என திரையுலகில் சிலர் அழைத்தார்கள். இப்போது கூட ரஜினியை விட விஜயின் சம்பளம் அதிகம்தான். ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் 150 கோடி எனில் ஜனநாயகன் படத்தில் விஜயின் சம்பளம் 230 கோடி என்கிறார்கள்.
விஜயின் ரீ-ரிலீஸ் படங்கள் கூட நல்ல வசூலை பெறுகிறது.. அவரின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கி ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை.
பராசக்தி படத்தை வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனம். எனவே தியேட்டர்களை பெறுவதற்காக சில வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் ரெட்ஜெயண்ட் தரப்பு போன் செய்தால் நாங்கள் ஜனநாயகன் படத்தைதான் திரையிட திட்டமிட்டிருக்கிறோம். எனவே, பராசக்தி படம் வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கி வெளியாகவில்லை. பராசக்தி படம் மட்டுமே கடந்த 9ம் தேதி வெளியானது. அதைத்தவிர வேறு படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே, பராசக்தியை வேண்டாம் என சொன்ன அந்த விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பராசக்தியை கொடுங்கள் என கேட்டால் கோபத்தில் தரமுடியாது என சொல்லிவிட்டதாம் ரெட் ஜெயண்ட் தரப்பு.



