Rajinikanth: ரஜினிகாந்த் என்றால் அவர் நடிகர் என்பதை தாண்டி ஆன்மீகவாதியாகவே இன்றும் இருக்கிறார். அதற்கு அவரின் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவமும் உதாரணமாக இருக்கிறது. இது அவரின் ஒரு படத்தின் கதை போல இருப்பதாக கூட தோணலாம்.
ரஜினிகாந்துக்கு சிறு வயதிலே முரட்டுத்தனம் ஜாஸ்தி. அது அவருக்கு அளவில்லாத துணிச்சலை கொடுத்தது. அதிலும் சின்ன வயதிலே சில விஷயங்களை அசால்ட்டாக செய்வாராம். அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த சம்பவம்.
இதையும் படிங்க: ரஜினியின் முரட்டுத்தனம்… படிக்கும் போதே போலீஸ்நிலையம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம்…
பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள ஒரு காட்டில் பூதச்சாமியார் என்ற சாமியார் இருப்பதாக தகவல்கள் பரவுகிறது. இதை கேட்ட ரஜினியின் நண்பர்கள் பயப்பட ரஜினியோ “பூதமாவது! சாமியாராவது!” எனக் கேலி செய்தாராம். இதில் கடுப்பான நண்பர்கள் பயமில்லைனா அந்த காட்டுக்கு போய் சாமியாரை பார்த்துட்டு வா என்கின்றனர்.
உடனே ரஜினியும் எனக்கென்ன நான் போகிறேன் எனக் கிளம்பி சென்றுவிட்டாராம். அடர்ந்த காட்டில் யாருமே இல்லாமல் தனியாக தைரியமாக நடந்து செல்கிறார். வெகு தூரம் சென்றுவிட்டாராம். ஆனால், சாமியாரைக் காணோம்.
நேரமும் மாலை நெருங்க இருள் சூழ தொடங்கியது. நிசப்தமாக இருக்க ரஜினிக்கு லேசாக பயம் கொண்டதாம். அப்போ ஒரு குரல், வா, மகனே வா! என அழைத்ததாம். திரும்பி பார்த்தால் 60 வயது மதிக்கத்தக்க ஆள் சடை சடையாகத் தொங்கும் தலைமுடியுடன் நின்று இருந்தாராம்.
இதையும் படிங்க: 22 முறை அஜீத்துடன் மோதிய பிரசாந்த் படங்கள்!. ஜெயித்தது அல்டிமேட் ஸ்டாரா?.. டாப் ஸ்டாரா?..
இவர்தானோ அந்த பூதச்சாமியார் என ரஜினி நினைத்தாராம். அந்த சாமியார் அவருக்கு சில மந்திரங்களை சொல்லி இன்னைக்கு போய் நாளைக்கு வா என அனுப்பினாராம். வெளியில் ரஜினிக்காக காத்திருந்த நண்பர்கள் அவர் வராமல் போகவே பயத்தில் இருந்தார்களாம். அப்போ நான் பூத சாமியாரை பார்த்துட்டேன் என கத்திக்கொண்டே ஓடி வந்தாராம் ரஜினிகாந்த்.
நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறி பெருமைப்பட்டு கொண்டார். மறுநாளில் இருந்து பூதச்சாமியாரை போய் ரஜினி பார்த்து வந்தாராம். சில நாட்கள் இது தொடர்ந்தது. அவர் ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் கற்றுக்கொடுத்து “எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்” எனக் கூறி ஆசீர்வதித்து அனுப்பினாராம். அன்று தான் பூதச்சாமியாரை ரஜினி பார்த்தது கடைசி. இது ரஜினியின் எந்த படத்தில் பின்னால் வந்தது என நினைக்கிறீர்கள்!
இதையும் படிங்க: அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…