Connect with us

Review

மனசுல கருத்து கந்தசாமின்னு நினைப்பு!.. பில்டப் எல்லாம் புஸ்ஸா போச்சு.. சிங்கப்பூர் சலூன் விமர்சனம்!..

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலேயே விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்றால் அந்த படத்தை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். அதன் பிறகு இயக்குநர் கோகுல் பிடுங்கியது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். கார்த்தியை வைத்து காஷ்மோரா, மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஜுங்கா படத்தை பண்ணியவர் காணாமல் போய் விட்டார். அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என ரீமேக் செய்தார். அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்த அந்த படமும் ஓடவில்லை.

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு எஸ்கேப் ஆன நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜி சிக்கிக் கொண்டார். முடியும் என்றால் எல்லாம் முடியும். அதற்கு முடியும் உதவும் என்கிற ஒன்லைன் உடன் எடுக்கப்பட்ட இந்த படம் வெட்டத் தெரியாதவனிடம் தலையை கொடுத்து கடைசியில் இதுதான் புது ஹேர்ஸ்டைல் என சொல்லி ஏமாற்றும் கடைக்காரர் போல இந்த சிங்கப்பூர் சலூன் படத்தை ரசிகர்கள் தலையில் கட்டியிருக்கிறார் இயக்குநர் கோகுல் மற்றும் ஆர்ஜே பாலாஜி.

இதையும் படிங்க: சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்..

வித்தியாச வித்தியாசமாக புரமோஷன்கள் செய்ய காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதத்தையாவது திரைக்கதையில் புதுமையை புகுத்த காட்டியிருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும்.

தங்கள் ஊரில் சாச்சா (லால்) சிங்கப்பூர் சலூன் வைத்து செம ஸ்டைலாக முடி வெட்டியதை பார்த்து இன்ஸ்பயராகும் கதிர் (ஆர்ஜே பாலாஜி) சிறந்த முடி திருத்தம் செய்பவராக மாறி சிங்கப்பூர் சலூனை பெரியளவில் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சிக்க அதற்கு எதிராக அவருக்கு வரும் தடைகள் மற்றும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

இதையும் படிங்க: கருப்பா இருக்க.. எப்படி அஜித் படத்துல? பல தடவை தல படத்தை மிஸ் பண்ண சோகத்தில் நடிகர்

ஹீரோயின் மீனாக்‌ஷி செளத்ரி படம் முழுக்க அழுது கொண்டே நம்மையும் அழவைக்க, அவரது அப்பாவாக நடித்துள்ள சத்யராஜின் காமெடி போர்ஷன்கள் மட்டுமே ரசிகர்களை இடைவேளை வரை சிரிக்க வைக்கிறது. அதன் பின்னர், படம் படு மொக்கையாக மாறி ரியாலிட்டி ஷோ பிரச்சனையில் ஆரம்பித்து பல கருத்துக்களை திணித்து ரசிகர்களை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டனர்.  லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவாவின் கேமியோ காட்சிகள் ரசிகர்களுக்கு ஆறுதல்.

சிங்கப்பூர் சலூன் – தம்பி அந்த பக்கம் போகாத!

ரேட்டிங் – 2.5/5

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top