
sac vijay
இயக்குனர் ராஜேஷ்வர், பவித்ரன் உள்ளிட்ட சிலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வெங்கடேஷ். இவர் இயக்கிய முதல் திரைப்படம் மகா பிரபு. இந்த படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் 1996ம் வருடம் வெளியானது. அதன்பின் பல படங்களையும் வெங்கடேஷ் இயக்கியிருந்தார்..
விஜயை வைத்து செல்வா, நிலாவே வா, பகவதி ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கடேஷ் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். ‘மகாபிரபு படத்திற்கு பின் பவித்ரன் சார் தயாரிக்க நான் ஒரு படத்தை இயக்குவது என முடிவானது. அப்போது விஜய் வளர்ந்து கொண்டு இருந்தார்.. எனவே அவரை வைத்து படம் செய்வது என முடிவு செய்தோம்..
எனவே எஸ்ஏ சந்திரசேகரரை சந்தித்து ஒரு காதல் கதையை சொன்னேன்.. கதையை கேட்டவர் ‘கதை நன்றாக இருக்கிறது.. ஆனால் உங்களிடம் நான் எதிர்பார்த்தது ஒரு ஆக்சன் கதைதான்.. உங்களின் மகாபிரபு படத்தை பார்த்துவிட்டு ‘இந்த இயக்குனருடன் ஒரு படம் செய்ய வேண்டும்’ என விஜய் என்னிடம் கூறினார். அதனால்தான் உங்களை அழைத்தேன்.. உங்களிடம் ஆக்ஷன் கதை இருக்கிறதா?’ எனக்கேட்டர்.
‘என்னிடம் ஆக்சன் கதை இல்லை சார்’ என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ‘நாங்கள் ஒரு கதை கேட்டு வைத்திருக்கிறோம்.. அந்த கதையை கொடுப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார்.. அந்த கதையை நீங்கள் படமாக இயக்குங்கள்’ என்றார்.. கதையை கேட்டேன்.. கதை பிடித்திருந்தது.. ஆனால், அதிக பட்ஜெட் கொண்ட கதை.. பவித்ரன் சாரும் அதற்கு சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘செல்வா’. செல்வா படத்திற்கு பின் மீண்டும் எஸ்ஏசி என்னை அழைத்து ‘நீங்கள் முதலில் விஜய்க்கு ஒரு காதல் கதை சொன்னீர்களே.. அதை படமாக எடுப்போமா?’ என்று கேட்டார்.. அதுதான் ‘நிலாவே வா’ என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


