Connect with us

Cinema News

வேலையில்லா பட்டதாரி வாய்ப்பை அமலா பால் இப்படித்தான் வாங்கினாரா?.. விவாகரத்துக்கு அதுதான் காரணமா?..

நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ’இலை’ என பெயர் சூட்டியுள்ளார். சமீபத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இருந்தால் அமலா பால்.

நடிகை அமலா பாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் சிலர் அவருடைய பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு நெகட்டிவ் கமெண்ட் களையும் பதிவிட்டு வந்தனர். இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்ட அமலா பால் திருமணத்துக்குப் பிறகும் தான் நடிப்பேன் என்றும் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் அடம் பிடித்தது தான் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய காரணம் என மூத்த பத்திரிக்கையாளர் சவிதா ஜோசப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜயை பற்றி சரியாக கணித்த ரகுவரன்! ஒரு தீர்க்கதரசிதான்.. என்ன சொன்னார் தெரியுமா?

ஆனால், நடிகை அமலாபாலின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என சில கிசுகிசுக்கள் கிளம்பின. அதற்கு முக்கிய காரணமே வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் என்கிறார் சபிதா ஜோசப்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக வேறு சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், நடிகை அமலாபால் தனுஷின் கேரவனுக்குள் சென்ற நிலையில் சுமார் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார். அதன் பின்னர் உடனடியாக அவர்தான் ஹீரோயின் என அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையும் படிங்க: ரஜினி பட பாட்டை ஆட்டைய போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. எஸ்.கே 23 பட தலைப்பு இதுதானாம்!..

அமலா பாலை ஏ.எல். விஜய் விவாகரத்து செய்யவும் அந்த விவகாரம் தான் காரணம் என ஏகப்பட்ட பேர் சினிமாவில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர். அது பெரிய அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அமலா பால் வட இந்திய நண்பருடன் இணைந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவருடன் திருமணம் மறந்து விட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அந்த நபர் தன்னை ஏமாற்றினார் என்றும் திருமணம் நடைபெறவில்லை என்றும் அந்த நபருக்கு எதிராக புகாரும் அளித்திருந்தார் அமலா பால் என்றார்.

ஜகத் தேசாய் என்பவருடன் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது குழந்தையை பெற்றுக் கொண்டார் அமலா பால். விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார். ஏற்கனவே பல படங்கள் அவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வருகின்றன. குழந்தை சற்று வளர்ந்ததும் மீண்டும் தென்னிந்தியா முழுவதும் பல படங்களில் அவர் நடிப்பார் என்றே தெரிகிறது என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராமராஜன், மோகனை விட கவுண்டமணிக்கு தான் ரீ-என்ட்ரி சூப்பரா அமையப்போகுதா? அதையும் தான் பார்ப்போமே..!

google news
Continue Reading

More in Cinema News

To Top