கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் மாஸ்க். இதனை தொடர்ந்து தற்போது கென் ராய்சன் என்ற இயக்குனரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான பேச்சுகள், இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே பலரும் ரசித்தனர். அப்படி இருக்கையி தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது உண்மை.
இப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி -ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.




