முருங்கைக்காயால ஒண்ணும் செட்டாகலயா? எப்படி சொல்லலாம்? பாக்கியராஜை சீண்டும் நாட்டாமை!..

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்க, இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்க உள்ள படம் 'ஹிட் லிஸ்ட்'. இதற்கான ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அதில் பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார். பொதுவா பாடி வந்து வெயிட் போட போட முட்டிலாம் வலிக்க ஆரம்பிச்சிரும். எல்லாரும் ஹெல்த்த நல்லா வச்சிருங்கன்னு தான் நான் சொல்வேன். இந்த 75 வயசுலயும் நான் திடமா இருக்கேன்னு சொன்னா ஒழுங்கா உடற்பயிற்சி செய்து […]

By :  sankaran v
Update: 2024-05-15 23:15 GMT

Sarathkumar, Packiyaraj

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்க, இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்க உள்ள படம் 'ஹிட் லிஸ்ட்'. இதற்கான ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அதில் பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

பொதுவா பாடி வந்து வெயிட் போட போட முட்டிலாம் வலிக்க ஆரம்பிச்சிரும். எல்லாரும் ஹெல்த்த நல்லா வச்சிருங்கன்னு தான் நான் சொல்வேன். இந்த 75 வயசுலயும் நான் திடமா இருக்கேன்னு சொன்னா ஒழுங்கா உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமா வச்சிக்கறது தான் காரணம்.

இதையும் படிங்க... இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

சௌத்ரி சார் கலையுலகிற்கு மிகப்பெரிய பொக்கிஷம். அவரு கூட 13 படம் பண்ணியிருக்கேன். 100வது படம் பண்ணலாம்னு சொல்லிருக்கலாம்னு நினைக்கிறேன். ரிஜிஸ்டர் பண்ணிறது பெட்டர். சூர்யவம்சம் 2 பண்ணலாம்னு பேசிருக்கிறோம். அது சரியா அமையல. சூர்யவம்சம் 2வா இருக்கட்டும். 3, 4 ஆகக் கூட இருக்கட்டும். எனக்கு 150 வயசானாலும் நடிப்பேன். ஏன்னா பத்திரிகையாளர் ரெடியா ஆயிட்டாங்க. சரத்குமார் மென்டல் ஆயிட்டான். 150 வயசு வரைக்கும் வாழ்வார்னு போடுவாங்க. சந்தோஷம் எனக்கு.

150 வயசு வரை வாழறதை நினைச்சி சந்தோஷப்படுறதை விட்டுட்டு, வாழ்வானான்னு கிண்டல் பண்றது தான் இப்ப அதிகம். அதுதான் அவங்களுக்கு நியூஸ். எது நியூஸைக் கொடுக்குமோ அதை முதல்ல கொடுத்துடணும். அப்போ தான் அவங்க சந்தோஷப்படுவாங்க.

இதையும் படிங்க... கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கனும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

'சரத்குமார் 150 வருஷம் எப்படி வாழமுடியும்?'னு சொல்வாங்க. ரஜினி சார் பார்க்குற பாபாவே 4000 வருஷமா வாழ்ந்துருக்காரு. புரட்சித்தலைவர் மக்கள் திலகம் இல்லேன்னாலும் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதுதான் வாழ்க்கை. நம்ம நடந்து சென்ற பாதையில் அடுத்தவர் பயணிக்கிறாரான்னு பின்னாடி பார்க்கணும். உள்ளத்தால் இளமையாக இருப்பவர்கள் தான் இயக்குனர்களாக இருக்க முடியும். மற்றவர்களை இயக்குபவர்களாக இருக்க முடியும். அதுக்கு உடல் ஆரோக்கியம் தேவை. ஆல்கஹால், போதை பொருள் எல்லாம் தேவையில்லாதது. சுவர் இருந்தால் தான் சித்திரம்.

ஒண்ணே ஒண்ணு தான் பாக்கியராஜ் சார் பல பேரு மனசை உடைச்சிட்டாரு. அவரு என்ன சொன்னாருன்னா '3 நாள் முருங்கைக்காய் கொண்டு வந்தாங்க. முருங்கைக்காய் கீரைக் கொண்டு வந்தாங்க. சாம்பார் வச்சிக் கொடுத்தாங்க. ஆனா ஒண்ணும் செட்டாகல'ன்னாரு. 'அவரு சீன் செட்டாகல'ன்னு சொன்னாருன்னு நினைக்கிறேன். நான் எதையும் நேரடியா கேட்டுருவேன். என்ன சார் உங்களுக்கு இந்த முருங்கைக்காயாலா பிரச்சனைன்னு கேட்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News